கமல் மீது ஸ்ரீதேவிக்கு இருந்த ஆசை.. ராத்திரியில் அவர் செய்த விஷயம் இருக்கே.. யப்பா இதுவேறயா?
சென்னை: கமல்ஹாசன் இந்திய திரையுலகில் பெருமிகு அடையாளங்களில் ஒருவராக இருக்கிறார். சிறுவயதிலிருந்தே நடித்து வரும் அவர் இந்த வயதிலும் படு பிஸியாக இருக்கிறார். கடைசியாக அவர் நடிப்பில் உருவான தக் லைஃப் மோசமான தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக அன்பரறிவ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் அவர் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்றை பார்க்கலாம்.
சிறுவயதில் இருந்து கேமரா முன் தோன்றி நடித்துவருபவர் கமல்ஹாசன். நடிப்பு மட்டுமின்றி நடனம் உள்ளிட்ட துறைகளிலும் அனுபவம் வாய்ந்தவர். சினிமாவில் அவருக்கு தெரியாத ஏரியாக்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு எதுவாக இருந்தாலும் இறங்கி வேலை செய்யக்கூடிய நபர் அவர். அதன் காரணமாகத்தான் உலக நாயகன் என்றும் விண்வெளி நாயகன் என்றும் திரைத்துறையினராலும் ரசிகர்களாலும் நீண்ட காலமாக கொண்டாடப்படுகிறார்.
கமலின் ஸ்பெஷல்: கமலை பொறுத்தவரை தன்னுடைய படத்தில் ஏதாவது ஒரு பரிசோதனை முயற்சியை செய்து பார்ப்பதில் ஆர்வம் மிகவும் உடையவர். அவரது விருமாண்டி திரைக்கதையில் புதிய பாணியை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது. அதேபோல் ஏராளமான படங்களில் புதுப்புது தொழில்நுட்பங்களையும் அவர் அறிமுகப்படுத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவே அவரை பலரும் கொண்டாடுவதற்கு இன்னொரு தனிப்பட்ட காரணமாகவும் அமைந்திருக்கிறது.

இந்த வயதிலும் பிஸி: கமல்ஹாசன் இப்போதும் பிஸியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் தக் லைஃப் திரைப்படம் வெளியானது. ஆனால் அந்தப் படம் மோசமான தோல்வியையும் விமர்சனத்தையும் கேலியையும் சம்பாதித்தது. அடுத்ததாக அன்பறிவ் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். படத்தின் ஷூட்டிங் மிக விரைவில் தொடங்கவிருக்கிறது. சினிமா மட்டுமின்றி அரசியலிலும் கவனம் செலுத்திவருகிறார். அவர் இப்படி ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளில் சவாலான குதிரை சவாரியை செய்துவருகிறார்.
காதல் மன்னன் கமல்: கமல்ஹாசன் அவரது இளவயதில் காதல் மன்னனாகவே கொண்டாடப்பட்டவர். இளம் பெண்கள், நடிகைகள் என பலர் அவர் மீது க்ரஷ்ஷில் இருந்த கதையெல்லாம் உண்டு. நடிகை ஸ்ரீவித்யா சின்சியராக காதலித்தார். ஆனால் அந்த காதல் கைகூடாமல் போய்விட்டது. அதனையடுத்து வாணி கணபதி, ரேகா உள்ளிட்டோரை திருமணம் செய்து விவாகரத்து செய்தவர் கௌதமியுடன் பிறகு வெளியேறிவிட்டார். இப்படி தனது பெர்சனல் வாழ்க்கையை எந்த ஒளிவு மறைவுமின்றி வைத்திருந்தவர்.
குட்டி பத்மினி பேட்டி: இந்நிலையில் அவர் குறித்து நடிகை குட்டி பத்மினி ஒரு வீடியோவில், "கமல்ஹாசனை காதலிக்காத நடிகைகளே இல்லை என்று சொல்லலாம். ஸ்ரீதேவிக்கும் கமல் மீது ஆசை இருந்தது. அது அந்த வயதுக்குரிய ஈர்ப்பு என்பது புரிந்தது. நான் ஸ்ரீதேவியிடம், 'அவர் எல்லோரையும் கழற்றிவிட்டுவிட்டு வாணியைத்தான் திருமணம் செய்துகொள்வார்' என்று சொல்லிக்கொண்டே இருந்தேன்.
ராத்திரியில் செய்தது: ஒரு படத்தில் நான், கமல், ஸ்ரீதேவி பணியாற்றினோம். அந்தப் படத்தின் ஷூட்டிங் ஒரு நாள் இரவு நடந்தது. ஒரு ஏக்கர் நிலத்தில் பங்களா இருந்தது. கமல் எங்களிடம் நீங்கள்தான் தைரியமான பெண்கள் ஆச்சே. இந்த பங்களாவை சுற்றி வாருங்கள் என்று சொன்னார். பயந்த ஸ்ரீதேவியிடம் இதில் பயப்படுவதற்கு என்ன இருக்கிறது என்று சொல்லி அழைத்து சென்றேன். ஆயிரம் ரூபாய் பந்தயம். நாங்களும் சுற்றி வந்தோம். அப்போது ஒரு மரத்திலிருந்து கமல்ஹாசன் திடீரென குதித்து எங்களை பயமுறுத்தினார். அதை பார்த்து ஸ்ரீதேவி மயக்கமே போட்டுவிட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











