குண்டு ஆகக்கூடாது.. இல்லனா விட்டு போய்டுவேன்.. திருமணம் முன்பு அமலாவுக்கு இந்த கண்டிஷன் போட்டாரா நாகார்ஜுனா?

ஹைதராபாத்: நாகார்ஜுனா தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இந்த வயதிலும் தனது உடலை ஃபிட்டாக வைத்து இளம் நடிகர்க்ளுக்கு டஃப் கொடுத்துக்கொண்டிருக்கிறார். அவர் தமிழில் கடைசியாக கூலி படத்தில் நடித்திருந்தார். படம் படுதோல்வியை சந்தித்தது. சூழல் இப்படி இருக்க பிரபல நடிகை குட்டி பத்மினி பல ரகசியங்களை பகிர்ந்திருக்கிறார்.

நாகேஸ்வர ராவின் மகனான நாகார்ஜுனா திரைத்துறையில் அறிமுகமானபோது ஆரம்பத்தில் சில படங்கள் சரியாக போகவில்லை. தந்தையின் பெயரை கெடுத்துவிடுவாரோ என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலைமையில், ராம்கோபால் வர்மா இயக்குநராக அறிமுகமான சிவா படத்தில் நடித்தார். அந்தப் படம் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்து நாகார்ஜுனாவுக்கு நிலையான இடம் ஒன்றை திரைத்துறையில் பெற்றுக்கொடுத்தது. அதனையடுத்து கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு கெத்து காண்பித்தார்.

தமிழில் நாகார்ஜுனா: தெலுங்கு திரையுலகத்தில் அவருக்கான இடம் கிடைத்ததை அடுத்து தமிழிலும் அவருக்கு வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அப்படி பிரவீன் காந்தி இயக்கிய ரட்சகன் திரைப்படத்தில் நடித்தார். பிரவீனின் இயக்கம், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, நாகார்ஜுனாவின் ஸ்டைலிஷ் லுக், நடிப்பு ஆகியவைகளால் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தொடர்ந்து அவரது கவனம் தெலுங்கில் சென்றது. பல வருடங்களுக்கு பிறகு கூலி படத்தின் மூலம் கோலிவுட்டில் நாகார்ஜுனா ரீ என்ட்ரி கொடுத்தார் அவர். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு படமும் இல்லை, அவரது ரோலும் இல்லை.

இந்த வயதிலும் ஃபிட்: நாகார்ஜுனாவுக்கு வயது 66. இந்த வயதிலும் தனது உடலமைப்பை ஃபிட்டாக வைத்திருக்கிறார். கூலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில்கூட, நாகார்ஜுனாவின் இளமை ரகசியம் குறித்து ஆச்சரியப்பட்டு பேசியிருந்தார் ரஜினி. வயது 60க்கு மேல் ஆனாலும் டோலிவுட்டில் இளம் நடிகர்களுக்கு இன்றுவரை அவர் டஃப் கொடுத்துக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Kutty Padmini has spoken about the condition Nagarjuna put on Amala
Photo Credit:

பெர்சனல் வாழ்க்கை: அவரது பெர்சனல் வாழ்க்கையை பொறுத்தவரை முதலில் நடிகை வெங்கடேஷின் தங்கையான லட்சுமியை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு பிறந்தவர்தான் நாக சைதன்யா. அந்தத் திருமண வாழ்க்கை பாதியில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து நடிகை அமலாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு பிறந்தவர் அகில். இந்நிலையில் அமலா - நாகார்ஜுனா குறித்து பிரபல நடிகை குட்டி பத்மினி தனது யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

குட்டி பத்மினி பேச்சு: அவர் அந்த வீடியோவில், "நாகார்ஜுனாவை நான் 10, 12 வயதில்தான் முதன்முறையாக பார்த்தேன். ரொம்பவே கூச்சப்பட்டவர். பிறகு பெரிய ஹீரோவாக மாறிவிட்டார். அவர் முதலில் வெங்கடேஷின் தங்கையை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டுவிட வேண்டும் என்றுதான் முதல் மனைவி கண்டிஷன் போட்டார். ஆனால் நாகார்ஜுனா அதை கேட்கவில்லை. எனவே அவர் அந்த உறவிலிருந்து வெளியேறிவிட்டார்.

அமலாவுக்கு போட்ட கண்டிஷன்: அதனையடுத்துதான் அமலாவுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. ஒருமுறை அமலா என்னிடம், 'பத்மினி நாகார்ஜுனா என்னை காதலிக்கிறார். ஆனால் திருமணத்துக்கு பின்பு குண்டு ஆகக்கூடாது. குழந்தை பெற்றாலும் குண்டு ஆகக்கூடாது. அப்படி ஆகிவிட்டால் நான் உன்னைவிட்டு போய்விடுவேன். அதேபோல் ஆண் குழந்தைததான் வேண்டும் என கண்டிஷன் போட்டிருக்கிறார்' என கூறினார். இப்படி கண்டிஷன் போட்டுத்தான் அமலாவை நாகார்ஜுனா திருமணம் செய்துகொண்டார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X