லட்சுமி மேனன் இனி காலேஜ் கேர்ள்...“நடிப்பும், படிப்பும்” சைட் பை சைடாக போகுமாம்!

சென்னை: நடித்துக் கொண்டே, படிப்பிலும் கவனம் செலுத்துவேன் என்று நடிகை லட்சுமி மேனன் உறுதியாக தெரிவித்துள்ளார்.

நடிகை லட்சுமிமேனன் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சியடைந்தவுடன் கல்லூரியில் சேர்ந்து படிக்கப் போவதாகவும் அறிவித்தார்.

கேரள மாநிலம் தேவாராவில் உள்ள எஸ்.எச்.கல்லூரியில் அவருக்கு சீட் கிடைத்துள்ளது. பி.ஏ ஆங்கில இலக்கியத்தில் சேர்ந்துள்ளார். கல்லூரியில் வகுப்புகள் விரைவில் துவங்க உள்ளது.

சமமான முக்கியத்துவம்:

சமமான முக்கியத்துவம்:

இது குறித்து லட்சுமி மேனன் கூறும்போது, ‘‘நடித்துக் கொண்டே படிக்கவும் முடிவு செய்துள்ளேன். இரண்டுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுப்பேன்.

அம்மாவின் ஆசை இது:

அம்மாவின் ஆசை இது:

ஆரம்பத்தில் பேஷன் டிசைனிங் படிக்கத்தான் திட்டமிட்டேன். என் அம்மா பட்டப்படிப்பை முடித்துவிடும்படி சொன்னார். அதனால் தான் பி.ஏ ஆங்கிலத்தில் சேர்ந்துள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார்.

அஜித்தின் தங்கை:

அஜித்தின் தங்கை:

லட்சுமிமேனன் தற்போது அஜித் படத்தில் நடித்து வருகிறார். இதில் தங்கை கேரக்டரில் வருகிறார். கவுதம் கார்த்திக் ஜோடியாக சிப்பாய் படத்திலும் நடிக்கிறார்.

அது இல்லாட்டி இது:

அது இல்லாட்டி இது:

மேலும் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றனவாம். கல்லூரி திறந்த பிறகு படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வகுப்புக்கு செல்ல திட்டமிட்டு உள்ளார் லட்சுமி மேனன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X