»   »  பிரியதர்ஷனுடன் வாழ்ந்தது அருவறுக்கத்தக்க வாழ்க்கை..! - நடிகை லிஸி

பிரியதர்ஷனுடன் வாழ்ந்தது அருவறுக்கத்தக்க வாழ்க்கை..! - நடிகை லிஸி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் பிரியதர்ஷனுடன் முற்றிலும் மரியாதையற்ற, அருவறுக்கத்தக்க வாழ்க்கை வாழ்ந்ததாக நடிகை லிஸி லட்சுமி இன்று கூறியுள்ளார்.

இயக்குநர் பிரியதர்ஷனிடமிருந்து இன்று முறைப்படி விவாகரத்தைப் பெற்றார் நடிகை லிஸி. இதற்காக அவரும் பிரியதர்ஷனும் தனித்தனியாக சென்னை குடும்ப நல நீதிமன்றம் வந்திருந்தனர்.

Actress Lissy legally divorced Priyadharshan today

விவாகரத்துக்குப் பிறகு லிஸி வெளியிட்ட அறிக்கை:

"இன்று திரு. பிரியதர்ஷன் உடனான எனது விவாகம் அதிகார்வபூர்வமாக ரத்து செய்யப்பட்டுவிட்டது. இன்று சென்னையில் அதற்கான அதிகார்வபூர்வ படிவங்களில் நாங்கள் இருவரும் கையெழுத்திட்டுவிட்டோம்.

விவாகரத்துக்காக விண்ணப்பித்து விட்டு நான் காத்திருந்த காலம் எனக்கு மிகவும் சோதனையாக அமைந்தது. சமீப காலங்களில் ஹிரித்திக் ரோஷன் - சுசேன், திலீப் - மஞ்சு, விஜய் - அமலா பால் ஆகியோர் விவகாரத்துக்கு விண்ணப்பித்ததாக வந்த தகவல்கள் அறிந்து நான் அவர்களுக்காக பெரிதும் வருந்தியிருக்கிறேன். அது போன்ற நிகழ்வுகள் அவர்களுக்கும் மன வருத்ததையே அளித்திருக்கும். இருந்தும் அவர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் மரியாதையளித்தே பிரிந்தனர்.

ஆனால் எனது நிலையோ இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. சென்னை உயர்நீதி மன்றம் தலையிடும் வரை என்னை கடுமையாக காட்டுமிராண்டித்தனத்துடனேயே அனுகினர். எங்கள் விவகாரத்தே நான் எங்கள் வாழ்க்கை எப்படியொரு அருவருக்கத்தக்கதாக இருந்திருக்குமென பறைசாற்றியிருக்கும். என் வாழ்வில் கடினமான நெடிய பாதை இத்துடன் நிறைவடைந்து விட்டதாக கருதுகிறேன்.

இத்தருணத்தில் இது போன்ற ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் எந்த வித எதிர்பார்ப்புமின்றி என்னுடன் இருந்த வழக்கறிஞர்கள், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு எனது நன்றியினைத் தெரிவித்து கொள்கிறேன். எனக்கு பெரிதும் உறுதுனையாக இருந்த ஊடக நண்பர்களுக்கும் இத்தருணத்தில் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். என் இரு குழந்தைகளின் காதலும், பாசத்திற்க்கும் என்றும் நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். இவை அனைத்தையும் தாண்டி எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி.

-இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார் லிஸி.

English summary
Actress Lissy Lakshmi has got divorce legally from director Priyadharshan Today at Madras Family Court.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X