இது தான் கடைசி.. இத்தோட நிறுத்திக்கோங்க.. அவதூறு செய்தி பரப்புவர்களை எச்சரித்த மஹிமா நம்பியார்!
சென்னை: நடிகை மஹிமா நம்பியார், இணையத்தில் தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக எச்சரித்துள்ளார். அண்மைக்காலமாக, ஒரு யூடியூப் சேனல் மற்றும் ஒரு தனிப்பட்ட பயனர் தன்னை அவதூறு செய்யும் வகையில் கருத்துகளைப் பரப்பி வருகிறார். அவருக்கு இது என் கடைசி எச்சரிக்கை என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சட்டை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான நடிகை மஹிமா நம்பியார். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக என்னமோ நடக்குது, மொசக்குட்டி, குற்றம் 23, அண்ணாதுரை, மதுரராஜா, மகாமுனி உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து பெயர் எடுத்தார். மஹிமா நம்பியார், தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளத் திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.

நடிகை மஹிமா நம்பியார்: கடந்த சில வாரங்களாக, மஹிமா நம்பியாரின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் சிலர் வேண்டுமென்றே தவறாகப் பரப்பி வந்தனர். இது அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. இது குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மஹிமா வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த சில நாட்களாக என் பெயரில் தவறான மற்றும் ஆபாசமான கருத்துகளுடன் கூடிய புகைப்படங்களையும், வீடியோக்களையும் சிலர் பரப்பி வருகின்றனர்.
இது எனது கடைசி எச்சரிக்கை: இதுகுறித்து, நடிகை மஹிமா நம்பியார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நீளமான அறிக்கையைப் பதிவிட்டுள்ளார். அதில், சம்பந்தப்பட்டவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், இல்லையெனில் கடுமையான சட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த அவதூறு பிரச்சாரத்தால் தனது மன அமைதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் மீது இத்தகைய தாக்குதல்கள் மிகவும் வேதனை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது எனது கடைசி எச்சரிக்கை என்று தனது பதிவில் அவர் அழுத்தமாக குறிப்பிட்டிருந்தார். திரையுலக பிரபலங்கள் பலர் இணைய தாக்குதல்களுக்கு ஆளாகி வரும் நிலையில், மஹிமா நம்பியாரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இணையத்தில் அவதூறு பரப்புபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பல பிரபலங்கள் குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











