Don't Miss!
- News
மோடி ஆவணப்படம் vs காஷ்மீர் ஃபைல்ஸ்..இடதுசாரி, பாஜக மாணவர்களால் ஹைதராபாத் பல்கலையில் டென்ஷன்!
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Sports
விறுவிறுப்புக்கு நோ பஞ்சம்.. இந்தியா - நியூசி, முதல் டி20 போட்டி.. விருந்து படைக்கும் ராஞ்சி பிட்ச்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
ஆக்ஷன் காட்சியில் நடித்த போது கையில் காயம்.. போட்டோ ஷேர் செய்த மாஸ்டர் பட நடிகை!
சென்னை: படப்பிடிப்பின் போது கையில் ஏற்பட்ட காயத்தை நடிகை மாளவிகா மோகனன் தனது சோஷியல் மீடியாவில் ஷேர் செய்துள்ளார்.
மலையாள நடிகையான மாளவிகா மோகனன் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார்.
பிரபுதேவாவின் தேள் ரிலீஸ் தேதி வெளியானது!
அந்தப் படத்தில் பூங்கொடி கதாப்பாத்திரத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்தார். தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்தார் நடிகை மாளவிகா மோகனன்.

தனுஷுடன் மாறன் படத்தில்
அடுத்தடுத்து டாப் நடிகர்களின் படங்களில் நடித்ததால் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார் மாளவிகா மோகனன். இன்ஸ்டாகிராமில் மட்டும் நடிகை மாளவிகா மோகனன் சுமார் 3 மில்லியன் ஃபாலோயர்களை பெற்றுள்ளார். தற்போது தனுஷுடன் மாறன் படத்தில் நடித்து வருகிறார் மாளவிகா மோகனன்.

இந்தியில் யுத்ரா..
மேலும் இந்தியில் தயாராகும் யுத்ரா படத்திலும் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இதில் மாளவிகா மோகனனுக்கும் சண்டை காட்சிகள் உள்ளன. மாளவிகா மோகனன் வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சியொன்றை மும்பையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் படக்குழு காட்சிப்படுத்தியது.

காயம் பட்ட போட்டோ..
அப்போது எதிர்பாராத விதமாக மாளவிகா மோகனன் கையில் அடிப்பட்டது. இதில் கையில் ரத்தக்கட்டு ஏற்பட்டு சிவந்தது. இதையடுத்து அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் தனது கையில் காயம் பட்ட போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.

லிப்ஸ்டிக் தானே அது
இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பார்த்து இருங்கள் என அக்கறையுடன் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். அதேநேரத்தில் பல நெட்டிசன்கள் அடேங்கப்பா எவ்ளோ பெரிய காயம் என கிண்டலடித்து வருகின்றனர். இன்னும் சிலர் லிப்ஸ்டிக் தானே அது என்றும் கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video

கிளாமர் தூக்கலாக
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகை மாளவிகா மோகனன், அவ்வப்போது தனது போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார். சமீப காலமாக கிளாமர் தூக்கலாக போட்டோக்களை ஷேர் செய்து வரும் மாளவிகா மோகனனை நெட்டிசன்கள் விளாசி வருவது குறிப்பிடத்தக்கது.