என் அம்மா அப்பாவுக்காக நான் வீட்டுக்குள்ளேயே இருக்கேன்.. விஜய் பட ஹீரோயின் அதிரடி!

சென்னை: தன்னுடைய அப்பா அம்மா மற்றும் குடும்பத்தினரின் நலன் கருதி தான் வீட்டிலேயே இருப்பதாக விஜய் பட நடிகை போட்டோ வெளியிட்டுள்ளார்.

Recommended Video

Malavika Mohanan Stunning Photoshoot | Master Audio Launch

நடிகை மாளவிகா மோகன் பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக பூங்கொடி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார். இதனை தொடர்ந்து விஜயின் மாஸ்டர் படத்தில் கமிட்டானார்.

இப்படத்தின் ஷுட்டிங் நிறைவடைந்து விட்டது. மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் படத்தின் ரிலீஸ் தள்ளி போகும் என தெரிகிறது.

ஊரடங்கு

ஊரடங்கு

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது.மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அம்மா அப்பாவுக்காக

பிரபலங்களும் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என் அம்மா அப்பாவுக்காக நான் வீட்டிற்குள்ளேயே இருக்கிறேன் என்று எழுதப்பட்ட சார்ட்டுடன் உள்ளார்.

குடும்பத்தினருடன்

குடும்பத்தினருடன்

மேலும் என் பெற்றோர், என் சகோதரர், என் அன்புக்குரியவர்கள் மற்றும் நெருங்கியவர்களின் ஆரோக்கியம் வாழ்க்கையில் எனக்கு மிக முக்கியம். நாம் பொறுப்பற்றவர்களாகவும் அலட்சியமாகவும் இருப்பது தீங்கு விளைவிக்கும் வைரஸை ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்கிறது. வீட்டிற்குள் இருங்கள், நன்றியுடன் இருங்கள் மற்றும் விலைமதிப்பற்ற நேரத்தை குடும்பத்தினருடன் அனுபவியுங்கள்.

யாருக்காக இருக்கிறீர்கள்?

யாருக்காக இருக்கிறீர்கள்?

உங்களுடைய ஒவ்வொரு சிறிய செயலும் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பற்றி சுய விழிப்புடன் இருங்கள். நீங்கள் யாருக்காக வீட்டில் இருக்கிறீர்கள்? இவ்வாறு நடிகை மாளவிகா மோகனன் பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவிற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X