»   »  7 ஆண்டுகள் காதலித்த தொழில் அதிபரை மணந்த 'சொப்பன சுந்தரி' மனிஷா

7 ஆண்டுகள் காதலித்த தொழில் அதிபரை மணந்த 'சொப்பன சுந்தரி' மனிஷா

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நடிகை மனிஷா யாதவ் தான் 7 ஆண்டுகளாக காதலித்து வந்தவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

வழக்கு எண் 18/9 படம் மூலம் நடிகையானவர் மனிஷா யாதவ். ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், பட்டைய கிளப்பணும் பாண்டியா, த்ரிஷா இல்லன்னா நயன்தாரா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாடலுக்கு நடனமாடியிருந்தார்.

காதல்

காதல்

மனிஷா யாதவும் பெங்களூரில் செட்டிலான தொழில் அதிபர் வர்னிதும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

திருமணம்

7 ஆண்டு கால காதல் திருமணத்தில் முடிய உதவிய குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் நலவிரும்பிகளுக்கு மனிஷா யாதவ் ட்விட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.

மீடியா

திருமணத்திற்கு குடும்பத்தார், நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். இதை மதித்த மீடியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் மனிஷா. மேலும் தன்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார்.

நடிப்பு

திருமண செய்தி அறிந்து ட்விட்டரில் வாழ்த்திய ரசிகர் ஒருவர் அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றார். வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த மனிஷா நடிப்பை தொடர திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

English summary
Actress Manisha Yadav has got married to her businessman boyfriend Warnid in Bengaluru.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil