மகளே இதை மட்டும் செய்.. மரண படுக்கையில் கோரிக்கை வைத்த மஞ்சுளா.. திட்டவட்டமாக மறுத்த வனிதா விஜயகுமார்

சென்னை: விஜயகுமாரின் மகளான வனிதா முதலில் நடிகையாக தனது சினிமா கரியரை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் குறைந்தன. ஆனால் சர்ச்சைகள் பெருகின. கடைசியாக அவர் நடிப்பில் Mrs&Mr என்ற திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தை அவரே இயக்கியிருந்தார் என்பதும்; அவரது மகள் ஜோவிகா தயாரித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேசமயம் படம் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் வனிதா கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

வனிதா விஜயகுமார் தமிழ்நாட்டில் பிரபலமானவர். விஜயகுமார் - மஞ்சுளா தம்பதிக்கு பிறந்த அவர் 90களில் ஹீரோயினாக நடித்தார் திடீரென சினிமாவிலிருந்து ஒதுங்கி ஆகாஷ் என்ற நடிகரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஸ்ரீஹரியும், ஜோவிகாவும் பிறந்தார்கள். திடீரன ஆகாஷுக்கும், வனிதாவுக்கும் திருமண வாழ்க்கையில் மனஸ்தாபம் ஏற்பட்டதால் அந்தத் திருமண வாழ்க்கை பாதியில் முடிந்தது. ஆகாஷை பிரிந்த வனிதா பிறகு இரண்டு திருமணங்கள் செய்து அதிலிருந்தும் வெளியே வந்தார். இதற்கிடையே இவர்களில் விஜய் ஸ்ரீஹரி ஹீரோவாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது இன்னிங்ஸ்: திரைத்துறையிலிருந்து ஒட்டுமொத்தமாக விலகியிருந்த வனிதா; பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மீண்டும் லைம் லைட்டுக்கு வந்தார். தொடர்ந்து அந்தகன், அநீதி ஆகிய படங்களில் நடித்திருந்தார். இரண்டு படங்களுமே அவருக்கு பெரிய பெயரை எதுவும் பெற்றுக்கொடுக்கவில்லை. இது ஒருபக்கம் இருக்க இத்தனை வருடங்கள் நடிகையாக மட்டும் இருந்த அவர் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார்.

Actress Manjula s Last Words to Daughter Vanitha Vijayakumar Revealed
Photo Credit:

அடி வாங்கிய Mrs&Mr: அந்தவகையில் Mrs&Mr என்ற படத்தை இயக்கினார். இதில் அவருடன் ராபர்ட் மாஸ்டர், ஷகிலா, கிரண் என பலர் நடித்திருந்தார்கள். படத்தை ஜோவிகா தயாரித்திருந்தார். வனிதா முதன்முறையாக இயக்கியிருந்ததால் இப்படம் மீது ஓரளவுக்கு எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. அதுமட்டுமின்றி இது ஒரு ஆபாச குடோன் என்ற விமர்சனத்தையும் சந்தித்தது. இது ஒருபக்கம் இருக்க படத்தில் சிவராத்திரி என்ற பாடலை பயன்படுத்தியதற்காக இளையராஜா வழக்கும் தொடர்ந்தார். அதுவும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

கண்டுகொள்ளாத ஓடிடி: வனிதா விஜயகுமாரை சுற்றித்தான் சர்ச்சைகளும், பஞ்சாயத்துகளும் வரும் என்ற நிலைமையில் அவர் எடுத்த படத்தை சுற்றியும் சர்ச்சைகள் எழுந்தன. அதனையும் அசால்ட்டாக கடந்து சென்றார் அவர். அதேபோல் இந்தப் படத்தை எந்த ஓடிடி நிறுவனமும் கண்டுகொள்ளவில்லை. அதற்கும் கலங்காத வனிதா தன் படத்தை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டார். அங்கும் படம் பெரிதாக ஈர்க்கவில்லை. இந்நிலையில் அவர் தனது தாய் மஞ்சுளா பற்றி கொடுத்த பழைய பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

என்ன பேசினார்?: அண்மையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "எனது இன்னும் 72 மணி நேரத்தில் இறந்துவிடுவார் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். அப்போது நான் அம்மாவின் அருகில்தான் இருந்தேன். அந்த சமயத்தில் அவர் என்னிடம் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியை கூப்பிடு என்று சொன்னார். அதெல்லாம் வேண்டாம் என்று சொன்னேன். பிறகு அவர் சரி நீ என்னை வீடியோ எடு; நான் அனைத்தையும் சொல்லிவிடுகிறேன் என கூறினார். அதற்கு நானோ இல்லை அம்மா இந்த நிலைமையில் வேண்டாம். அப்படி அவர்கள் என்னை ஏமாற்றினால் ஏமாற்றிவிட்டு நன்றாக இருக்கட்டும் என கூறினேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X