»   »  '30 வயசுதான்... குண்டாயிட்டேன்.. அக்கா, அண்ணி, ஆன்ட்டி ரோல்கள் ஓகே'! - அடுத்த ரவுண்டில் மந்த்ரா

'30 வயசுதான்... குண்டாயிட்டேன்.. அக்கா, அண்ணி, ஆன்ட்டி ரோல்கள் ஓகே'! - அடுத்த ரவுண்டில் மந்த்ரா

Posted By:
Subscribe to Oneindia Tamil
தமிழ் சினிமாவில் ப்ரியம் படம் மூலம் அறிமுகமாகி, நிறைய படங்களில் ரசிகர்கள் மனதை அலைபாய வைத்து, திருமணம் செய்து கொண்டு காணாமல் போன மந்த்ரா மீண்டும் நடிக்க வருகிறார்.

மந்த்ரா நடிக்க வந்தபோது அவருக்கு வயது ஜஸ்ட் 14-தானாம்! தமிழ்-தெலுங்கு மொழிகளில் 75க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துவிட்டார்.

2004-ல் சீனிவாஸ் என்ற தெலுங்கு உதவி இயக்குநரை காதலித்து மணந்தார். திருமணத்துக்குப்பின் மந்த்ரா நடிக்கவில்லை. சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த அவருக்கு இப்போது மீண்டும் நடிக்க ஆசை வந்துவிட்டது.

30 வயசுதான்... குண்டாயிட்டேன்

மீண்டும் வாய்ப்பு தேடும் அவர் தனது நடிப்பு ஆசை பற்றிக் கூறுகையில், "சின்ன வயசுலயே நடிக்க வந்துட்டேன். திருமணம் ஆனாலும் எனக்கு வயசு 30தான். ஆனால் என் உடம்பு கொஞ்சம் குண்டாகி விட்டது. கடந்த 7 வருடங்களாக, சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தேன். இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. அதற்கு காரணம் இருக்கிறது. முதலில், சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும்.

எனக்கு இப்போது 30 வயதுதான் ஆகிறது. குழந்தை பெற்றுக்கொள்வதற்கு இன்னும் வயது இருக்கிறது. வீட்டை கட்டி முடித்துவிட்டு, குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்.

இன்னொரு ரவுண்ட் சினிமாவில் வரவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. முன்பு போல் எனக்கு கதாநாயகி வாய்ப்பு தரமாட்டார்கள் என்று எனக்கு தெரியும். இப்போது வரும் இளம் கதாநாயகர்களுக்கு அம்மாவாக நடிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. மற்ற கதாநாயகர்களுக்கு அக்காவாக அல்லது அண்ணியாக நடிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.

மறுபிரவேசத்துக்காக, 89 கிலோவாக இருந்த என் உடம்பை 69 கிலோவாக குறைத்து விட்டேன்.

நான், சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவள் என்பதால், நன்றாக தமிழ் பேசுவேன். அதனால், மும்பை கதாநாயகிகளுக்கு 'டப்பிங்' பேச அழைப்பு வருகிறது. அதையும் ஏற்றுக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்,'' என்றார்.

English summary
Actress Manthra is gearing up for a reentry in Tamil cinema after the gap of 8 years
Please Wait while comments are loading...