»   »  பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதபோது காளி, துர்காவை வணங்குவது சரியா?: நடிகை கேள்வி

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதபோது காளி, துர்காவை வணங்குவது சரியா?: நடிகை கேள்வி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: மலையாள நடிகை மானபங்கப்படுத்தப்பட்டது குறித்து நடிகை லட்சுமி மஞ்சு நீண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

பிரபல மலையாள நடிகை படப்பிடிப்பில் இருந்து வீடு திரும்பிய போது காரில் கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டார். இந்நிலையில் இது குறித்து தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சு நீண்ட கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,

மலையாள நடிகை

மலையாள நடிகை

மலையாள நடிகை ஒருவர் கடத்தி, மானபங்கப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாம் இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டியுள்ளது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். அவரின் நிலையை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

கடவுள்

கடவுள்

நம் நாட்டில் ஒன்று பெண்களை கடவுளாக வணங்குகிறார்கள் அல்லது வீட்டிற்குள் வைத்து பூட்டுகிறார்கள். அதிர்ஷ்டசாலிகள் தாயாக, தாரமாக மதிக்கப்படுகிறார்கள். அவ்வளவு தானா பெண்கள்?

கடவுள் லட்சுமி

கடவுள் லட்சுமி

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நேரத்தில் கடவுள் லட்சுமி, பார்வதி, துர்கா, சரஸ்வதி மற்றும் காளியை தொடர்ந்து வணங்குவது சரியா?

பெண்கள்

பெண்கள்

பல பெண்கள் மானபங்கப்படுத்தப்படுதல், பலாத்காரம் செய்யப்படுதல், அவமதிக்கப்படுதல் உள்ளிட்ட செய்திகளை காலையில் எழுந்து செய்தித்தாள்களில் படிப்பது சாதாரணமாகிவிட்டது.

கடைசி

கடைசி

மலையாள திரையுலக உறுப்பினருக்கு நடந்த சம்வம் முதலும் அல்ல இதுவே கடைசியும் அல்ல. நான் எவ்வளவு பாதுகாப்பு இல்லாமல் உணர்கிறேன் என்பதை இந்த தருணத்தில் தெரிவிக்க விரும்புகிறேன். தெருவில் தனியாக செல்ல, அரசு போக்குவரத்தில் பயணம் செய்ய, தெருவில் பசங்க கும்பலாக இருந்தால் நடந்து செல்ல, நமக்கு பிடித்த உடை அணிய பயப்படுகிறோம்.

தீர்வு

தீர்வு

இருட்டிவிட்டால் வீட்டில் இருக்க வேண்டும், மது அருந்தக் கூடாது, ஒழுங்காக உடை அணிய வேண்டும், புகைப்பிடிக்கக் கூடாது, அதிகம் சிரிக்கக் கூடாது என்று பெண்களிடம் கூறுவது தீர்வாகாது. நாம் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும், எது சரி என்பதை புரிந்து கொள்ள வேண்டும், நல்ல எதிர்காலத்திற்காக தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார் லட்சுமி.

English summary
Actress Lakshmi Manchu has written a lengthy letter expressing her fear at a time a malayalam actress was abducted and molested.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil