Don't Miss!
- News
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டி.. 29 வயது சிவபிரசாந்த் வேட்பாளராக அறிவிப்பு
- Finance
அதானி குழுமத்தின் டாப் 5 நிறுவனங்களின் கடன் எவ்வளவு.. PSU வங்கிகள், தனியார் வங்கிகளில் எவ்வளவு?
- Sports
கோலிவுட்டில் கால்பதித்தார் தோனி.. முதல் தயாரிப்பின் அறிவிப்பு வெளியானது.. நடிகர்கள் யார் தெரியுமா??
- Lifestyle
சனி அஸ்தமனமாவதால் ஜனவரி 30 முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு...
- Technology
உஷார்.! 5G ஆபத்தானதா? இவ்வளவு மறைமுக பாதிப்பு இருக்கிறதா? IPS அதிகாரிகள் சொன்ன உண்மை.!
- Automobiles
நம்பவே முடியல... படத்தில் உள்ள இந்த பைக்கிற்கு இப்படியொரு வரலாறு உள்ளதா!! முழு விபரம்...
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
புனித யாத்திரையில் மும்தாஜ்..என் தவறுகளை மன்னித்து விடுங்கள்..கண்ணீர் விட்டு கதறி பிரார்த்தனை!
சென்னை : நடிகை மும்தாஜ், புனித பூமியான மெக்கா மற்றும் மதினாவிற்கு யாத்திரை மேற்கொண்டிருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குனர் டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான மோனிஷா என் மோனலிசா என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மும்தாஜ்.
அதன் பின் விஜய் நடிப்பில் வெளியான குஷி படத்தில் அனிதா என்ற ரோலில் நடித்திருந்தார். இந்த படத்தில் கட்டிப்புடி கட்டிப்புடிடா என்ற பாடலுக்கு நடனமாடி இளைஞர்களின் மனதில் தனக்கு என்று தனி இடத்தை பிடித்துவிட்டார்.
நடிகை
மும்தாஜ்
வீட்டில்
கொடுமை
தாங்கல..
100க்கு
போன்
போட்ட
பணிப்பெண்..
என்ன
நடந்தது?

மும்தாஜ்
கட்டுக்கோப்பான உடல் அமைப்பு, அம்சமான முகம், வசீகரிக்கும் கண் என ரசிகர்களைத் தன் வசப்படுத்தியவர் மும்தாஜ். இவர் சத்யராஜூடன் மலபார் போலீஸ், லூட்டி பிரபுவுடன் பட்ஜெட் பத்மநாபன், மிட்டா மிராசு ஆகிய படங்களில் நடித்துள்ளார். அர்ஜூனுடன் வேதம், ஏழுமலை, கார்த்திக்குடன் அழகான நாட்கள், சரத்குமாருடன் ஏய், டி.ராஜேந்தருடன் வீராசாமி, ராகவா லாரன்ஸ_டன் ராஜாதி ராஜா என பல நடிகர்களுடனும் பிசியாக நடித்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தார்.

மல மல மல மருத மலை
பிரஷாந்த் நடித்த சாக்லேட் படத்தில் "மல மல மல மருத மலை மல மருத மல" என்ற பாடலுக்கு டவலுடன் குத்தாட்டம் போட்டு இளைஞர்களின் தூக்கத்தைக் கெடுத்தார் நடிகை மும்தாஜ். இப்படி ஒரு ஆட்டமா என அசந்து போனார்கள் ரசிகர்கள். சுமாரான கதை அம்சத்தை கொண்ட இப்படத்தின் வெற்றிக்கு கை கொடுத்ததே இந்த பாடல் தான் எனலாம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில்
பல திரைப்படங்களில் நடித்திருக்கும் மும்தாஜ், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். அதில் ஷாரிக், தாடி பாலாஜியின் மனைவி நித்யா ஆகியோருடன் மும்தாஜ் சண்டையிட்டது பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து குறைவான வாக்குகளை பெற்று பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.

மெக்கா, மதினாவில் மும்தாஜ்
சினிமாவில் இருந்து ஒதுக்கி இருக்கும் மும்தாஜ், தன்னுடைய பேஸ் புக் பக்கத்தில், இஸ்லாமியர்களின் அடிப்படை கடமைகளில் ஒன்றான மெக்கா மற்றும் மதினாவிற்கு பயணம் மேற்கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். இதில் நான் இன்று மெக்காவில் இருக்கிறேன். அனைவருக்காகவும் இங்கு நான் பிரார்த்தனை செய்கிறேன். கடைசியாக இந்த பூமியில் எனக்கு மிகவும் பிடித்த இடத்திற்கு பயணம் செய்திருக்கிறேன். இந்த உற்சாகத்தை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. இருப்பினும் இதயபூர்வமான நன்றியை பகிர்ந்து கொள்கிறேன் என்றார்.

என் தவறுகளை மன்னியுங்கள்...
மேலும், அல்லாஹ் எனது துஆவையும் ஏற்றுக்கொள்ளுங்கள், யாஅல்லாஹ் கெட்டதில் இருந்து அனைவரையும் காப்பாற்றுங்கள், நாங்கள் செய்த அனைத்து தவறுகளை மன்னிப்பாயாக, அனைவருக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கையை தாருங்கள். அல்லாஹ் எல்லோருக்கும் இந்த தர்பார் நஸீபை தாருங்கள், தயவு செய்து எங்களை மன்னியுங்கள், நாங்கள் செய்த தயவுகளை மன்னியுங்கள் என்று கண்ணீர் மல்க இறைவனிடம் வழிபாடு நடத்தி உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் டிராண்டாகி வருகிறது.