Just In
- 7 hrs ago
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- 7 hrs ago
தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
- 10 hrs ago
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
- 11 hrs ago
ரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு நீங்களே பாருங்க!
Don't Miss!
- News
பிரிட்டனில் பரவும் உருமாறிய கொரோனா.. 24 மணி நேரத்தில் 55 ஆயிரம் பேர் வைரஸால் பாதிப்பு
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- Automobiles
எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நக்மாவுக்கு இன்று பிறந்தநாள்.. வாழ்த்து மழை பொழிந்த ரசிகர்கள்!
மும்பை : 90களின் இளவரசியாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை நக்மா தமிழ் ஹிந்தி தெலுங்கு உள்ளிட்ட எக்கச்சக்கமான திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.
தமிழில் காதலன் திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட நக்மாவுக்கு அடுத்தடுத்த படவாய்ப்புகள் அமைய தொடர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் தொடர்ந்து இடம் பிடித்தார்.
ரஜினி அங்கிள்.. அரசியலுக்கு வந்து கஷ்டப்படத் தேவையில்லை.. நடிகை வனிதா விஜயகுமார் ட்வீட்!
மேலும் நக்மா நடித்த பல திரைப்படங்கள் இன்று வரை முறியடிக்க முடியாத வசூல் சாதனையை செய்திருக்கும் நிலையில் டிசம்பர் 25 ஆம் தேதியான இன்று நக்மா தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

வசூல்சாதனை
நடிகை நக்மாவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது அந்த அளவுக்கு இந்திய சினிமாவில் இவரது பங்களிப்பு என்பது கணக்கிட முடியாத அளவிற்கு இன்றும் இருந்து வருகிறது. எக்கச்சக்கமான ஹிட் திரைப்படங்கள் முறியடிக்க முடியாத வசூல் சாதனைகள் என இவர் நடித்த படங்கள் இன்றுவரை அனைவரின் விருப்பப்படங்களாக இருக்கும் நிலையில் நடித்த கதாபாத்திரங்கள் இன்றுவரை பேசப்பட்டு வருகிறது.

காதலன்
1990களில் இந்திய சினிமாவின் இளவரசியாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை நக்மா இந்தி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பட்டைய கிளப்பி வந்த நிலையில் தமிழில் ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா ஹீரோவாக நடித்திருந்த காதலன் திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டார். காதலன் திரைப்படம் ஆரம்பத்தில் வரவேற்பை பெறவில்லை என்றாலும் இதன்பின் மாபெரும் வெற்றி பெற்று வசூலை அள்ளியது.

மெகா ஹிட்
தமிழில் காதலன் திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவது திரைப்படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து பாட்ஷா திரைப்படத்தில் ஜோடி போட்ட நக்மாவிற்கு இந்த திரைப்படம் திரை வாழ்க்கையிலேயே தவிர்க்கமுடியாத மெகா ஹிட் படமானது. வெளியான அனைத்து சென்டர்களிலும் சக்கைப்போடு போட்டு வசூலிலும் மிரட்டிய பாஷா திரைப்படம் இதுவரை தமிழ் சினிமாவின் ஐக்கானாக இருந்துவருகிறது.

பிரபல நடிகர்களுடன்
காதலன்,பாட்ஷா,மேட்டுக்குடி,பிஸ்தா ஜானகிராமன், லவ் போர்ட்ஸ், அரவிந்தன் என தமிழிலும் பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் கொடுத்து முன்னணி நாயகியாக வலம் வந்த நக்மா கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான தீனா மற்றும் சிட்டிசன் ஆகிய திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் வந்து சென்றிருப்பார்.

பிரபலங்கள் வாழ்த்து
இந்திய சினிமாவையே கதிகலங்க வைத்த நடிகை நக்மா மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வேண்டுமென ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ள நிலையில் டிசம்பர் 25 ஆம் தேதியான இன்று இவர் தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.