Don't Miss!
- Sports
எங்கள் இனிய நாளை கெடுத்து விடாதீர்கள்.. மன வேதனையாக இருக்கு.. திருமணமான முதல் நாளே ஆப்ரிடி டிவிட்
- News
டெல்லி விமான நிலையத்தில் கேன்சர் பாதித்த பெண் பயணியை இறக்கிவிட்ட அமெரிக்க விமானம்.. காரணம் என்ன?
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலமாக இருக்கப் போகுது...
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மச்சான்ஸ்க்கு குட் நியூஸ்..இரட்டை குழந்தைகளுடன் கோவிலில் வலம் வந்த நமீதா!
சென்னை : நடிகை நமீதா தனக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த தகவலை கேள்விபட்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
2004-ம் ஆண்டு வெளியான நடிகர் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நமீதா. முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்த அவர் இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தார்.
ஹாய் மச்சான்ஸ் என்று இளசுகளை செல்லமாக அழைத்து ரசிகர்கள் மனதில் தனிஇடம் பிடித்தார். விஜய், அஜித்,சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்த நமீதா, கவர்ச்சி நடிகையாகவும் வலம் வந்தார்.
பொன்னியின் செல்வன் படத்தை மிஸ் பண்ணிட்டேன்.. புதுப்பேட்டை தான் என்னுடைய அங்கீகாரம்!

நமீதா
அழகிய தமிழ் மகன், பில்லா, நான் அவன் இல்லை படங்களில் சிக்குனு இருந்த நமீதா, ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறினார். மன அழுத்தத்தால் தான் தனது உடல் அவ்வாறு மாறியதாக, நமீதா குறிப்பிட்டு இருந்தார். பட வாய்ப்புகள் குறைந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மட்டுமே தலைக்காட்டி வந்த நமீதா, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

காதல் திருமணம்
2017-ம் ஆண்டு நமீதா-வீரேந்திர சவுத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தனது பிறந்தநாளில் அறிவித்த நமீதா. தாய்மை... புதிய அத்தியாயம் தொடங்கியதும், நான் மாறினேன், மிகவும் மென்மையாக என்னுள் ஏதோ மாறியது என கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இரட்டை குழந்தைக்கு தாயானார் நமீதா
இந்நிலையில்,நமீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இரட்டை குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், ஹரே கிருஷ்ணா.. இந்த நல்ல சந்தர்ப்பத்தில், மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. உங்களின் ஆசியும் அன்பும் எங்களுக்கு என்றும் தேவை.

அனைவருக்கும் நன்றி
குரோம்பேட்டையில் உள்ள ரெலா மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. இந்த மருத்துவமனைக்கு நாங்கள் உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் .என்னை கர்ப்பகாலத்தில் வழிநடத்தி, என் குழந்தைகளை இந்த உலகத்திற்கு கொண்டு வந்த டாக்டர் புவனேஷ்வரி மற்றும் அவரது குழுவினருக்கு நான் உண்மையிலேயே கடமைப்பட்டிருக்கிறேன். சிறந்த நண்பராகவும் வழிகாட்டியாகவும் இருந்ததற்காக டாக்டர் நரேஷ்க்கு எனது நன்றி என தெரிவித்துள்ளார்.

கோவிலில் வழிபாடு
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடிகை நமீதா தனது கணவர் மற்றும் இரு கைக்குழந்தையுடன் ஈச்சம்பாக்கத்தில் உள்ள ராதாகிருஷ்ணன் கோவிலுக்கு சென்று வழிபட்டார். இரட்டை குழந்தையை பெற்றேடுத்த நடிகை நமீதாவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரித்து வருகின்றனர்.