»   »  ஒத்தைக்கு மறுக்கும் நமீதா!

ஒத்தைக்கு மறுக்கும் நமீதா!

Subscribe to Oneindia Tamil

மூத்த ஹீரோக்களின் பிடியிலிருந்து விடுபட்டு, இளம் நாயகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக மாறியுள்ளதால் ஒத்தப் பாட்டுக்குக் குத்தாட்டம் ஆடுவது, புதுமுக நடிகர்களுடன் நடிப்பதையெல்லாம் நிறுத்து விட்டாராம் நமீதா.

விஜயகாந்த்துடன் நடிப்பு வேட்டையை ஆரம்பித்த நேரமோ என்னவோ தொடர்ந்து மூத்த நடிகர்களுடேனேயே ஜோடி போட்டு கலக்கி வந்தார் நமீதா. இடையில் சத்யராஜுக்கும், நமீதாவுக்கும் கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆவதாக டாக் கிளம்பவே இருவரும் இணைந்து நிறையப் படங்களில் நடித்தனர்.

அதேபோல ஷக்தி சிதம்பரம் படங்களில் ஹீரோ இருக்கிறாரோ இல்லையோ, கண்டிப்பாக நமீதா இருப்பார் என்ற அளவுக்கு அவரது படங்களிலும் தவறாமல் இடம் பெற்று வந்தார் நமீதா.

தொடர்ந்து சத்யராஜ், சரத்குமார் என மூத்த நடிகர்களுடேனேயே சுற்றி வந்த நமீதா முதல் முறையாக இளையதளபதி விஜய்யுடன் இணைந்து அழகிய தமிழ் மகனில் முகம் காட்டினார். முதலில் நமீதாவின் கேரக்டரை சின்னதாகத்தான் வைத்திருந்தனர். ஆனால் அவரது திறமையைப் பார்த்துப் பிரமித்துப் போய் பெரிதாக்கி விட்டனராம் - கேரக்டரை.

அழகிய தமிழ் மகனில் ஹீரோயின் ஷ்ரியா என்றாலும் கூட நமீதாதான் மெயின் ஹீரோயின் போல அவரது கேரக்டர் மாறிப் போயுள்ளதாம்.

இதையடுத்து அஜீத்துடன் இணைந்து பில்லாவில் பின்னி எடுத்து வருகிறார். சிம்புவுடனும் சேரப் போகிறார். தனுஷ் மட்டும்தான் பாக்கி!

இப்படி இளைய தலைமுறை ஹீரோக்களுடன் ஜோடி போட ஆரம்பித்திருப்பதால் சில கொள்கைகளில் மாற்றம் செய்திருக்கிறாராம் நமீதா.

அதாவது ஒத்தப் பாட்டுக்குக் குத்தாட்டம் ஆட மாட்டேன். புதுமுக ஹீரோக்களுடன் சேர மாட்டேன். மூத்த நடிகர்களிலும் கூட முக்கிய நடிகர்களுடன் மட்டும்தான் சேர்ந்து நடிப்பேன் என்று பல புதிய முடிவுகளை எடுத்துள்ளாராம் நமீதா.

இதை அறியாத ஒரு தயாரிப்பாளர் நமீதாவை அணுகி ஒரே ஒரு பாட்டுதான், படத்துக்கான சம்பளத்தை இதுக்கு கொடுக்கிறேன், வந்து ஆடி அருள வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அவரிடம் தனது புதிய ரூல்ஸ்களைக் கூறி, ஃப்ரூட் ஜூஸ் கொடுத்து உபசரித்து அனுப்பி வைத்தாராம் நமீதா.

நமீதாவின் இந்த திடீர் மாற்றத்தால் கடுப்பாகியுள்ள தயாரிப்பாளர்கள், எத்தனை நாளுக்கு இந்தப் பவுசு, ரொம்ப நாள் தாங்காது இந்த ரவுசு என்று டி.ஆர். கணக்கில் கருவிக் கொண்டிருக்கிறார்களாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil