»   »  நடிகை நர்கிஸ் ஃபக்ரியின் கிரெடிட் கார்டு மூலம் ரூ. 6 லட்சம் மோசடி

நடிகை நர்கிஸ் ஃபக்ரியின் கிரெடிட் கார்டு மூலம் ரூ. 6 லட்சம் மோசடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை நர்கிஸ் ஃபக்ரியின் கிரெடிட் கார்டை க்ளோன் செய்து ரூ.6 லட்சம் பணம் ஏடிஎம் மையத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த நர்கிஸ் ஃபக்ரி மும்பையில் தங்கி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஹாலிவுட் படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில் நர்கிஸின் கிரெடிட் கார்டை யாரோ க்ளோன் செய்து அதன் மூலம் கடந்த திங்கட்கிழமை அமெரிக்காவில் ரூ. 6 லட்சம் பணம் எடுத்துள்ளனர்.

Actress Nargis Fakhri duped of Rs 6 lakh

இந்த பண பரிவர்த்தனை நடந்தபோது நர்கிஸ் மும்பையில் இருந்தார். பணம் எடுக்கப்பட்ட விபரம் அறிந்த உடன் அவர் கடந்த திங்கட்கிழமை இரவு இது குறித்து மும்பை ஜுஹு பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே நர்கிஸ் சம்பந்தப்பட்ட வங்கிக்கு போன் செய்து தனது கிரெடிட் கார்டை பிளாக் செய்துவிட்டார்.

4 மணிநேரத்தில் 14 முறை பண பரிவர்த்தனை நடந்தும் வங்கி ஏன் அதை கண்டுகொள்ளவில்லை என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

English summary
Bollywood actor Nargis Fakhri has allegedly been cheated of around Rs 6 lakh through fraudulent use of her credit card in the United States, police said.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil