சூப்பர் ஸ்டார் ஆப் சவுத்… நயன்தாராவை திக்குமுக்காட வைத்த வோக் இதழ்

Recommended Video

Vogue India Magazine: தெறிக்கவிடும் தென் இந்தியா நடிகர்கள்

சென்னை: உலகப் புகழ்பெற்ற வோக் மாத இதழானது, அக்டோபர் மாத இதழில் நயன்தாரா பற்றி கட்டுரை எழுதியுள்ளது. அதற்கான அதிகார பூர்வ அறிவிப்பை வோக் இந்தியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றிருக்கிறது. அதில் நயன்தாராவின் போட்டோவுடன் சூப்பர் ஸ்டார் ஆப் சவுத் என்ற பதிவையும் குறிப்பிட்டுள்ளது. தென்னிந்தியாவில் இருந்து வோக் இதழில் வரப்போகும் முதல் நடிகை நயன்தாரா தான்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் தெரிந்த நாயகி நயன்தாரா. அவரை தமிழக ரசிகர்கள் செல்லமாக லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பார்கள். நயன்தாரா நடிக்க வந்த புதிதில், எத்தனையோ அவமானங்களை சந்தித்த போதிலும், அவற்றை உதாசீனப்படுத்தி விட்டு, தன்னுடைய வெற்றி ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு நடித்து வருகிறார். இடையில் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் எத்தனையோ ஏமாற்றங்களை சந்தித்தாலும், அவற்றையே தன்னுடைய வெற்றிப் படிக்கட்டுகளாக மாற்றிக்கொண்டுவிட்டார்.

Actress Nayanthara appear in Vouge Magazine

இதன் காரணமாகவே, அவரால் தென்னிந்திய சினிமாவில் 14 ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக்கொள்ள முடிந்தது. கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான அறம் படத்தின் வெற்றியின் மூலம் லேடி சூப்பர்ஸ்டார் என்ற அங்கீகாரம், அவரை இன்னும் உற்சாகமுடன் செயல்படவைத்தது. இதையடுத்து, தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க முடிந்தது. பல நடிகைகள் ஹீரோயின் சப்ஜெக்ட்டுகளில் நடித்திருந்தாலும், அதிக மார்க்கெட் இருப்பது என்னவோ நயன்தாராவுக்கு மட்டும் தான்.

இன்றைக்கு தென்னிந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருப்பது நயன்தாரா மட்டுமே. தற்போது கடைசியாக மலையாளத்தில் லவ் ஆக்சன் டிராமா, தெலுங்கில் சைரா நரசிம்ம ரெட்டி மற்றும் தமிழில் கொலையுதிர் காலம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சினிமாக்கு வந்து சில வருடங்களிலேயே பெரிய உச்சத்தை அடைந்த சில நடிகைகளில் இவரும் ஒருவர்.

இப்பேர்ப்பட்ட நடிகைக்கு பல அங்கீகாரங்கள் இந்திய அளவில் கிடைத்திருக்கிறது. அதையடுத்து, தற்போது உலக அளவிலும் அங்கீகாரம் கிடைக்கவிருக்கிறது. ஆம் உலகப் புகழ்பெற்ற வோக் (VOGUE) மாத இதழானது அக்டோபர் மாத இதழில் நயன்தாரா பற்றி எழுதியுள்ளது. அதற்கான அதிகார பூர்வ அறிவிப்பை வோக் இந்தியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றிருக்கிறது.

அதில் நயன்தாராவின் போட்டோவுடன் சூப்பர் ஸ்டார் ஆப் சவுத் என்ற பதிவையும் குறிப்பிட்டுள்ளது. அதனுடன் அக்டோபர் மாத இதழில் நயன்தாராவுடன் மகேஷ் பாபு துல்கர் சல்மான் ஆகியோரின் பேட்டிகளும் வர உள்ளன. தென்னிந்தியாவில் இருந்து வோக் இதழில் வரப்போகும் முதல் நடிகை நயன்தாரா தான். இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து நயன்தாராக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X