»   »  நயன்தாராவுக்கு வயசு '13': ஹேப்பி பர்த்டே நயன்!

நயன்தாராவுக்கு வயசு '13': ஹேப்பி பர்த்டே நயன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நயன்தாரா நடிக்க வந்து இன்றுடன் 13 ஆண்டுகள் ஆகியுள்ளது.

ஜெயராம் நடித்த மனசினக்கரே மலையாள படம் மூலம் நடிகையானவர் நயன்தாரா. அந்த படம் 2003ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் தேதி வெளியானது. நயன்தாரா நடிக்க வந்து இன்றுடன் 13 ஆண்டுகள் ஆகிவிட்டது.

ஆண்டுகள் ஓடினாலும் அவரது அழகும், மவுசும் மட்டும் குறையவே இல்லை.

13 ஆண்டுகள்

13 ஆண்டுகள்

நயன்தாரா நடிக்க வந்து 13 ஆண்டுகளாகிவிட்டாலும் இன்றும் கோலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளார். மேலும் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையும் அவர் தான்.

சூப்பர், சுப்ரீம் ஸ்டார்

சூப்பர், சுப்ரீம் ஸ்டார்

ஹரி இயக்கத்தில் சுப்ரீம் ஸ்டார் ஜோடியாக ஐயா படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான நயன் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினி ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார்.

காதல்கள்

காதல்கள்

சிம்புவை காதலித்து பிரிந்தார். பின்னர் பிரவுதேவாவை காதலித்து அவரை திருமணம் செய்ய சினிமாவில் இருந்து ஒதுங்கினார். அந்த காதலும் முறிந்துபோக மீண்டும் நடிக்க வந்தார்.

உச்சம்

உச்சம்

இரண்டாவது காதல் முறிவுக்கு பிறகு நடிக்க வந்த நயன்தாராவின் கெரியர் டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது. முதல் இன்னிங்ஸில் கூட ஏற்ற, இறக்கம் இருந்தது. ஆனால் தற்போது ஏற்றம் மட்டும் தான்.

விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன்

காதலால் பல நடிகைகளின் மார்க்கெட் காலியாகியுள்ளது. ஆனால் அதே காதல் விவகாரத்தால் மார்க்கெட் பிக்கப்பானது நயனுக்கு மட்டுமே. இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்ய தயாராக உள்ளார் நயன்.

English summary
Actress Nayanthara has completed 13 long years in the industry. She continues to be the leading lady of Kollywood.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil