Don't Miss!
- Finance
சுத்தி சுத்தி அடிவாங்கும் அதானி.. சிட்டி குரூப் வைத்த செக்..!
- Technology
BSNL தரும் இந்த சலுகையை இந்தியாவில் வேறு யாருமே தரவில்லை.! மலிவு விலையில் 1 வருட 1 டைம் ரீசார்ஜ்.!
- Automobiles
அம்பானியாவே இருந்தாலும் யோசிச்சுதான் இனி சொகுசு காரை வாங்கணும்! அந்தமாதிரி செக் நிர்மலா சீதாராமன் வச்சிட்டாங்க
- News
இரட்டை இலை சின்னம் கேட்டால் கையெழுத்து போடுவேன்..சசிகலாவை சந்திப்பேன்..ஓ.பன்னீர் செல்வம் உறுதி
- Lifestyle
விபரீத ராஜயோகத்தால் பிப்ரவரியில் பண மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- Sports
பாகிஸ்தானுக்காக நான் எவ்வளவு செய்தேன்.. என்னை இப்படியா நடத்துவீங்க. இந்தியாவை பாருங்க -உமர் அக்மல்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தோழிக்கு முத்தம் கொடுக்கும் நஸ்ரியா..வைரலாகும் புகைப்படம் !
கொச்சி : நடிகை நஸ்ரியா தனது தோழிக்கு முத்தம் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் வெளியான டிரான்ஸ் திரைப்படத்தில் வேற லெவல் பர்ஃபாமன்ஸ் கொடுத்து ரசிகர்களை மிரள வைத்த நடிகை நஸ்ரியா இப்பொழுது பல்வேறு திரைப்படங்களில் நடித்தும் ஒரு சில திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.
பெரும்பாலாக மலையாளத் திரைப்படத்தில் நடித்து வரும் நஸ்ரியா தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் விருப்பமான நடிகையாக இருந்து வரும் நிலையில் இப்பொழுது அவரது தோழியுடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு நாங்கள் இருவரும் ரோமியோ ஜூலியட் என ரொமான்டிக்காக கூறியுள்ளார்.
சிரிச்சே
செத்துட்டேன்..
இப்படியெல்லாமா
எடுப்பாங்க..
பங்கமாக
கலாய்க்கப்படும்
பிரபல
சீரியல்
சீன்!

பகத் பாசில்
மலையாள திரை உலகில் ரொமான்டிக் கப்புலாக வலம் வந்து கொண்டிருக்கும் பகத் பாசில் மற்றும் நஸ்ரியாவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. நஸ்ரியா தமிழ் ரசிகர்களுக்கு நேரம், நய்யாண்டி, ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பரிச்சயமானதைத் தொடர்ந்து இப்பொழுது பகத் பாசில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து அவரும் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமாகி உள்ளார்.

ட்ரான்ஸ்
படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் தரமான படங்களை தயாரித்து வரும் நஸ்ரியா சமீபத்தில் வெளியான " ட்ரான்ஸ்" திரைப்படத்தை தயாரித்து நடித்தும் இருந்தார்.

இருவரின் நடிப்பும்
பகத் பாசிலின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியிருந்த ட்ரான்ஸ் திரைப்படத்தில் நஸ்ரியாவும் முக்கியமான லீட் கதாபாத்திரத்தில் நடித்திருந்தை தொடர்ந்து இருவரின் நடிப்பும் பிரபலமாக பேசப்பட்டது.

வியப்பில் ஆழ்த்தினார்
இதுவரை துடிப்பான நடிப்பு க்யூட்டான எக்ஸ்ப்ரசன் என நடித்து வந்த நஸ்ரியா "ட்ரான்ஸ்" திரைப்படத்தில் அப்படியே டோட்டலாக மாறி கலர்கலரான கிளாமர் உடையில் சிகரெட்டு மற்றும் மது என வேற லெவல் நடிப்பில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

தோழிக்கு முத்தத்தில்
இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு நஸ்ரியா மிக நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்டு இப்பொழுது மீண்டும் நடிக்க வந்திருப்பதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இவரிடம் தரமான திரைப்படங்களை எதிர்பார்த்து வரும் நிலையில் தற்பொழுது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தோழிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

ரோமியோ ஜூலியட்
தோழியுடன் செம ஜாலியாக பொழுதை கழித்த நஸ்ரியா அவருடன் இணைந்து பல்வேறு க்யூட்டான புகைப்படங்களையும் செல்பிக்களை எடுத்து பதிவிட்டு இருந்த நிலையில் அதில் ஒரு புகைப்படத்தில் சிறிது இடைவெளிவிட்டு இருவரும் முத்தத்தை பகிர்ந்தவாறு நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு நாங்கள் இருவரும் "ரோமியோ ஜூலியட்" என ரொமான்டிக்காக கூறி பதிவிட்டிருந்த இந்த ரொமான்டிக் புகைப்படம் இப்பொழுது வைரலாகி வருகிறது.