முயல்குட்டி மாதிரி க்யூட் போட்டோவுடன் டிசம்பர் மாதத்தை வரவேற்கும் நஸ்ரியா!

சென்னை: திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிக்காமல் சற்று விலகி இருந்த நடிகை நஸ்ரியா டிரான்ஸ் படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் வந்து அசத்தினார்

இதுவரை தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் மட்டும் நடித்து வந்த நஸ்ரியா முதல்முறையாக தெலுங்கில் அன்டே சுந்தரனிகி என்ற படத்தில் நடித்து அறிமுகமாகிறார்

தமிழ் சினிமாவில் மீண்டும் கப் பேக் எப்பொழுது கொடுப்பார் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்க இப்பொழுது முயல்குட்டி போல செம க்யூட்டாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு டிசம்பர் மாதத்தை வரவேற்றுள்ளார்.

 கனவுக்கன்னியாக

கனவுக்கன்னியாக

குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமாகி இப்பொழுது வெற்றிகரமான கதாநாயகியாக தென்னிந்திய சினிமாவில் உள்ள நடிகை நஸ்ரியா தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். நடித்து சில திரைப்படங்கள் மட்டுமே என்றாலும் இன்று வரை ரசிகர்களின் கனவுக்கன்னியாக உள்ளார். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் உருவான நேரம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான நஸ்ரியா அதன் பிறகு அட்லியின் இயக்கத்தில் ராஜா ராணி என்ற சூப்பர் ஹிட் வெற்றி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக மாறினார்

 ட்ரான்ஸ் படத்தில் நடித்து ரீ என்ட்ரி

ட்ரான்ஸ் படத்தில் நடித்து ரீ என்ட்ரி

நையாண்டி,வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்கா என தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதிற்கு மிகவும் நெருக்கமான நடிகையாக இன்றளவும் உள்ளார் . மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர் சில காலம் நடிக்காமல் இருந்த இவர் இப்பொழுது மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். அந்த வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ட்ரான்ஸ் படத்தில் நடித்து ரீ என்ட்ரி கொடுத்தார்

 அன்டே சுந்தரனிகி

அன்டே சுந்தரனிகி

இதுவரை க்யூட் டான கதாபாத்திரங்களில் மட்டுமே பார்த்த ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் பாப் கட்டிங், கவர்ச்சி உடை, சிகரெட்,மது என டோட்டலாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் ட்ரான்ஸ் படத்தில் நடித்து அதிரடி என்ரி கொடுத்த நஸ்ரியா இப்போது தெலுங்கு திரைப்படத் துறையிலும் கால் தடத்தை பதிக்கிறார். அந்த வகையில் அன்டே சுந்தரனிகி என்ற படத்தில் நடித்து வருகிறார்

Recommended Video

Nazriya Fahad Super Cool Video | Vijay lakshmi Workout From home
 முயல்குட்டி மாதிரி க்யூட் போட்டோ

முயல்குட்டி மாதிரி க்யூட் போட்டோ

இவ்வாறு தென்னிந்திய அளவில் மிக பிரபலமான நடிகையாக உள்ள நஸ்ரியா மீண்டும் ஒரு சுற்று வருவார் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்க தமிழில் எப்பொழுது படங்களில் நடிப்பார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கிறது. இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முயல்குட்டி போல க்யூட் போட்டோவை பதிவிட்டு டிசம்பர் மாதத்தை வரவேற்றுள்ள புகைப்படம் ரசிகர்களை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X