நிதி அகர்வாலின் பிறந்த நாள்.. தி ராஜா சாப் படக்குழு வெளியிட்ட போஸ்டர்!

சென்னை: நடிகை நிதி அகர்வால் இன்று தனது 32வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள், நண்பர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவரின் பிறந்த நாளை முன்னிட்டு, 'தி ராஜா சாப்' படக்குழு, அவரது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டர் இணையத்தில் தற்போது டிரெண்டாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

பாகுபலி படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த பிரபாஸ் இரட்டை வேடத்தில் நடித்து வரும் திரைப்படம் 'தி ராஜா சாப்'. மாருதி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில், சஞ்சய் தத், போமன் இரானி, மாளவிகா மோகனன், நிதி அகர்வால், வரலட்சுமி சரத்குமார், விடிவி கணேஷ், யோகி பாபு, வெண்ணிலா கிஷோர், பிரம்மானந்தம் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்து வருகின்றனர். மாளவிகா மோகனன் இந்தப் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடிகை நயன்தாரா சிறப்பு தோற்றத்தில் நடனமாடி இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், அது எந்த அளவிற்கு உறுதியான தகவல் என்று தெரியவில்லை. ஹாரர், காதல், காமெடி திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தை பீபில் மீடியா ஃபேக்டரி சார்பாக டி.ஜி. விஸ்வ பிரசாத் தயாரித்துள்ளார்.

Nidhhi Agerwal Birthday
Photo Credit:

நடிகை நிதி அகர்வால்: பாலிவுட் நடிகரான சஞ்சய் தத், பிரபாஸின் தாத்தாவாக இப்படத்தில் நடிக்கிறார். தமன் இசையமைக்க, கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார். ஐவி எண்டர்டெயின்மெண்ட் என்ற இணை தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் மீறப்பட்டதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், படத்தயாரிப்பில் சர்ச்சைகள் எழுந்துள்ளன. பிரம்மாண்டமான பொருட் செலவில் உருவாகி வரும் 'தி ராஜா சாப்' திரைப்படம் பிரபாஸின் வரவிருக்கும் படங்களில் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் பிரபாஸ், ஹனு ராகவபுடியின் பெயரிடப்படாத படமான 'ஸ்பிரிட்' மற்றும் 'சலார் 2' படங்களிலும் நடித்து வருகிறார்.

தி ராஜா சாப் படத்தின் போஸ்டர்: இந்நிலையில் தி ராஜா சாப் படக்குழு, நிதி அகர்வாலின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில், நிதி அகர்வால் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்யும் கிறிஸ்துவ பெண்ணாக காட்சி அளிக்கிறாள். தற்போது, இந்த போஸ்டர் இணையத்தில் தற்போது டிரெண்டாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. நடிகை நிதி அகர்வால், கடைசியாக பவன் கல்யாணுடன் 'ஹரி ஹர வீர மல்லு' திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. தற்போது நிதி அகர்வால், 'தி ராஜா சாப்' படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அவருக்கு ஒரு திருப்புமுனை படமாக இருக்கும் என நம்பப்படுகிறது. பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் அடுத்த ஆண்டில் திரையில் வெளியாக உள்ளது.

முன்னா மைக்கேல் ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய நிதி அகர்வால், தமிழில், பூமி படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து, ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாகவும், கலகத்தலைவன் படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் வசூல் ரீதியாக தோல்வி என சொல்லப்பட்டாலும், இந்த படம் அவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுத்தந்தன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X