»   »  அரசியல் தலைவரின் மகனை காதலித்து மணக்கும் கார்த்தி ஹீரோயின்

அரசியல் தலைவரின் மகனை காதலித்து மணக்கும் கார்த்தி ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை நிகிதாவுக்கும் இளைஞர் காங்கிரஸின் முன்னாள் துணை தலைவரின் மகன் தொழில் அதிபர் ககன்தீப் சிங் மாகோவுக்கும் வரும் 9ம் தேதி திருமணம் நடைபெறுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி படங்களில் நடித்து வருபவர் மும்பையை சேர்ந்த நிகிதா. தமிழில் சரோஜா, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நிகிதாவுக்கு திருமணம் நடக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

காதல்

நிகிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது உறவினரின் திருமணத்தில் கலந்து கொண்டார். அங்கு வந்த தொழில் அதிபர் ககன்தீப் சிங் மாகோவுக்கும், நிகிதாவுக்கும் பார்த்த உடனே காதல் வந்துவிட்டதாம்.

திருமணம்

நிகிதாவும், ககனும் அடிக்கடி சந்தித்து காதலை வளர்த்துள்ளனர். அதன் பிறகு அவர்களின் பெற்றோர் சந்தித்து திருமணத்தை நிச்சயித்துள்ளனர். வரும் 8ம் தேதி மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ரிஷப்ஷனும், 9ம் தேதி திருமணமும் நடைபெறுகிறது.

பிரபலங்கள்

நிகிதா, ககனின் திருமணத்தில் தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள். ககன் இளைஞர் காங்கிரஸின் முன்னாள் துணை தலைவர் மஹிந்தர் சிங் மாகோவின் மகன் ஆவார்.

நிகிதா

நிகிதா

நிகிதாவும், ககனும் தேனிலவுக்கு பஹாமாஸ் செல்கிறார்களாம். நிகிதா ஹாய் என்ற தெலுங்கு படம் மூலம் நடிகையானார். அவர் தமிழில் குறும்பு, சத்ரபதி, வெற்றிவேல் சக்திவேல், கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன் படங்களில் நடித்துள்ளார். வெங்கட் பிரபுவின் சரோஜா படத்தில் கோடான கோடி பாடலுக்கு கவர்ச்சியாக ஆடியிருப்பார்.

English summary
Actress Nikitha Thukral is set to marry her industrialist boyfriend Gagandeep Singh in Mumbai this weekend.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil