என்னது கர்ப்பமா இருக்கேனா? இப்படி எல்லாம் வதந்தி கிளப்பாதீர்கள்.. கடுப்பான நிக்கில் கல்ராணி!
சென்னை : கர்ப்பமாக இருப்பதாக இணையத்தில் பரவி வரும் வதந்திக்கு நடிகை நிக்கி கல்ராணி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் தெலுங்கில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஆதி. இவர் தமிழில் அறிமுகமான மிருகம் படத்தில், மோசமான பெண் பித்தனாக நடித்திருந்தார்.
மிருகம் படத்தை தொடர்ந்து ஈரம்,அய்யனார், ஆடுபுலி ஆட்டம், அரவான் யாகவாயினும் நா காக்க, மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஆதி நிக்கி திருமணம்
நடிகர் ஆதி நிக்கி கல்ராணியுடன் இணைந்து மரகத நாணயம் படத்தில் நடித்ததிலிருந்தே காதலர்களாக பல இடங்களில் காதலர்களாக வலம் வந்த இந்த ஜோடிக்கு மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் மே மாதம் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வெகு விமர்சையாக திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் பல நடிகர் நடிகைகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

வெளிநாட்டில் ஹனிமூன்
திருமணம் முடிந்த கையோடு வெளிநாட்டுக்கு ஹனிமூன் சென்ற இந்த ஜோடி விதவிதமான போட்டோக்களை போட்டு இணையத்தை தெறிக்கவிட்டனர். அதுமட்டுமில்லாவது100வது திருமண நாளை கலிபோர்னியாவுக்கு சென்று கொண்டாடிய நிக்கி, நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு போட்டியாக போட்டோவைபோட்டு இணையத்தை தெறிக்கவிட்டார்.

நிக்கி கர்ப்பம்
திருமணம் முடிந்து இன்றுடன் 6 மாதங்கள் ஆன நிலையில், நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.எனவே விரைவில் இவர்களது வீட்டிற்கு குட்டி வாரிசு வர இருப்பதாக தகவல் பரவியதை. விரைவில் பெற்றோர்கள் ஆகவிருக்கும் இந்த ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

வதந்தி கிளப்பாதீர்கள்
இணையத்தில் பரவி இந்த செய்திக்கு நடிகை நிக்கி விளக்கம் அளித்துள்ளார். இதில், செய்தி எனக்கே தெரியவில்லை. என் சார்பாக சிலர் இந்த செய்தியை பரப்பி உள்ளனர். நண்பர்களே நான் கர்ப்பமாக இல்லை. இந்த அற்புதமான செய்தியை கோபத்தில் வெளியிடும் முதல் நபர் நான் தான், தயவுசெய்து வதந்திகளை பரப்பாதீர்கள் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











