மரியாத தெரியலயா.. பூனைக்கு புலின்னு பேரு வச்சா எப்டி பார்க்கும்? நடிகையை பங்கமாக்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை நிவேதா பெத்துராஜ் ஷேர் செய்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Recommended Video

Nivedha Pethuraj Race Car பக்கம் திரும்பியுள்ளார் | Lady Thala Ajith, Car Racing

தமிழில் ஒருநாள் கூத்து படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.

தொடர்ந்து பொதுவாக என் மனசு தங்கம், டிக்டிக்டிக், திமிர் புடிச்சவன், சங்கத்தமிழன், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கில் கைவசம்

தெலுங்கில் கைவசம்

இதேபோல் தெலுங்கிலும் பிஸியாக உளள நிவேதா பெத்துராஜ், முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். தற்போது விரட்ட பர்வம், பாகை, ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவ்

சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவ்

தமிழிலும் பொன் மாணிக்கவேல் மற்றும் பார்ட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை நிவேதா பெத்துராஜ், அவ்வப்போது தனது போட்டோக்கள் மற்றும் தனது படம் தொடர்பான அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறார்.

வீடியோவை வெளியிட்டு

சமீபத்தில் கார் ரேஸில் பங்கேற்ற போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து திணறடித்தார். இந்நிலையில் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகை நிவேதா பெத்துராஜ்.

சட்டை செய்யாத பூனை

சட்டை செய்யாத பூனை


அதாவது, தான் வளர்க்கும் பூனைக்குட்டியான டைகரை, டைகர் டைகர் என அழைக்கிறார் நிவேதா பெத்துராஜ். ஆனால் அந்த பூனைக்குட்டியோ அவரை சட்டை செய்யாமல் எழுந்து செல்கிறது.

மரியாதை தெரியாத பயபுள்ள

மரியாதை தெரியாத பயபுள்ள

இந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள நிவேதா பெத்துராஜ் மரியாதை தெரியாத பயபுள்ள, என தமிழ், தெலுங்கு மற்றும் உருது மொழியிலும் திட்டியுள்ளார். மேலும் அதற்கு வைத்துள்ள பெயர்தான் இதற்கு காரணம் என நினைக்கிறீர்களா என்றும் கேட்டுள்ளார் நிவோ.

பூனைக்கு புலின்னு பேரு வச்சா

பூனைக்கு புலின்னு பேரு வச்சா

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், பூனைக்கு டைகர்னு பேரு வச்சா அது எப்படி பார்க்கும் என கலாய்த்துள்ளனர். இன்னும் சிலர் அந்த பூனை கேமராவை பார்த்து வெட்கப்படுகிறது போல என்றும் கிண்டலாக கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X