Nivetha Pethuraj: தேடவில்லை என்றாலும்.. அதுதான் வந்துட்டே இருக்கு.. நிவேதா பெத்துராஜ் வேதனை!
சென்னை: நடிகை நிவேதா பெத்துராஜ் தென்னிந்திய சினிமாவில் பலரது கவனம் பெற்ற நடிகையாக உள்ளார். இவர் சமீபத்தில்தான் தனது காதலரை அறிமுகம் செய்து வைத்தார். அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது எண்ணங்களை பகிர்ந்து வரும் பழக்க வழக்கங்களைக் கொண்டவர். அந்த வகையில் தற்போது தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக உலகம் முழுவதும் நடைபெறும் போர்கள் குறித்தும் அதனால் மனிதர்கள் எப்படி தங்களது மனிதத்தை இழந்து வருகிறார்கள் என்பதையும் பகிர்ந்துள்ளார்.
அவரது எக்ஸ் பக்கத்தில், " செய்தி பார்க்க எந்த தளத்திற்குப் போனாலும், கொலை, போர், கொடுமை காட்சிகள் எளிதாக பரிமாறப்படுகிறது. நாம்தேடாவிட்டாலும் தினமும் அதை நுகர்கிறோம். இந்த அளவு வன்முறை நம்முள் உள்ள மனிதத்தன்மையை அழித்து விடும். தகவலை அறிய வேண்டுமென்றால் வேறு வழி தேவை" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவுக்கு ரசிகர்களும் இணையவாசிகளும் கமெண்ட் பகுதியில் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.
நடிகை நிவேதா பெத்துராஜ் தனது காதலரை அறிமுகம் செய்து வைத்த பின்னர், நிலையில், அவரது காதலர் பிக்பாஸ் ஜூலியின் முன்னாள் காதலரா என்ற விவாதம் சமூக வலைத்தளங்களில் ஏற்பட்டது. நிவேதா பெத்துராஜ் கடந்த சில வாரங்களுக்கு முன் தனது காதலர் ரஜித் இப்ரானுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

நிவேதா பெத்துராஜ், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தனித்துவமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரது திரைப்படங்கள் மற்றும் கதாபாத்திரத் தேர்வுகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன. நடிப்பு மட்டுமின்றி, கார் பந்தயங்களிலும் பங்கேற்று வருகிறார். ரசிகர்கள் மத்தியில் அவர் யாரையாவது காதலிக்கிறாரா என்ற கேள்வி நீண்ட நாட்களாகவே இருந்தது. ஒரு நடிகர் உடன் அவர் உறவில் இருப்பதாக கிசுகிசுக்களும் எழுந்தன. ஆனால், நிவேதா பெத்துராஜ் இதற்கு எந்தப் பதிலும் அளிக்காமல் மௌனம் காத்து வந்தார்.
நிவேதா பெத்துராஜ்: இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்னர் அவர் தனது காதலரான ரஜித் இப்ரானை அறிமுகப்படுத்தினார். துபாயில் தொழிலதிபராக இருக்கும் ரஜித் இப்ரான், மாடலிங்கிலும் ஈடுபட்டு வருகிறார். நிவேதா பெத்துராஜ் தனது குழந்தை பருவத்தில் துபாயில் வசித்து வந்ததாகவும், அவரது குடும்பத்தினர் இப்போதும் அங்கேயே இருப்பதாகவும் கூறப்படுகிறது. துபாயிலேயே நிவேதா பெத்துராஜும் ரஜித் இப்ரானும் சந்தித்துக் கொண்டிருக்கலாம் என்றும் தகவல்கள் பரவின.
ஜூலியின் முன்னாள் காதலரா?: இதற்கிடையே, ரஜித் இப்ரான், பிக்பாஸ் ஜூலியின் முன்னாள் காதலராக இருக்கலாம் என்று பலர் கூறி வருகின்றனர். கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலி தனது X பக்கத்தில் ரஜித் இப்ரானுடன் இருந்த புகைப்படங்களையும், அவருடன் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். மேலும், ரஜித் இப்ரானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தும் ஜூலி புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். ரஜித் இப்ரான் தொடர்பான அனைத்து பதிவுகளிலும் அவரை தனது 'பெஸ்டி' என்று ஜூலி குறிப்பிட்டுள்ளார். இந்த காரணங்களால், ரஜித் இப்ரான் பிக்பாஸ் ஜூலியின் முன்னாள் காதலராக இருந்திருக்கலாம் என இணையவாசிகள் கருதுகின்றனர். அவர்களுக்குள் ஏதோ ஒரு கட்டத்தில் பிரிவு ஏற்பட்டிருக்கலாம், அதன் பின்னரே நிவேதா பெத்துராஜ் மற்றும் ரஜித் இப்ரான் காதலிக்கத் தொடங்கியிருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.
வருத்தம்: இந்நிலையில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில், " செய்தி பார்க்க எந்த தளத்திற்குப் போனாலும், கொலை, போர், கொடுமை காட்சிகள் எளிதாக பரிமாறப்படுகிறது. நாம்தேடாவிட்டாலும் தினமும் அதை நுகர்கிறோம். இந்த அளவு வன்முறை நம்முள் உள்ள மனிதத்தன்மையை அழித்து விடும். தகவலை அறிய வேண்டுமென்றால் வேறு வழி தேவை" என்று பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











