Don't Miss!
- News
ட்விஸ்ட்! பாஜகவுக்கு வரிசையாக ஆதரவு தரும் கட்சிகள்! நேற்று புதிய நீதிக்கட்சி.. இன்று ஐஜேகே ஆதரவு
- Finance
Budget 2023: பட்ஜெட்டில் இப்படி ஒரு சர்பிரைஸ் கிடைக்குமா.. தங்கம் இறக்குமதியாளர்களுக்கு வாய்ப்பு?
- Sports
பந்துவீச்சில் மாற்றம் செய்தேன்.. இரட்டிப்பாக உழைப்பதில் மகிழ்ச்சி.. டி20 தொடருக்கு ரெடி - ஹர்திக்
- Automobiles
டொயோட்டாவுக்கு ஏழரை சனி! காரை நம்பி வாங்கியவர்கள் அதிர்ச்சி! பிரச்னைக்கு மேல பிரச்னையா வந்துகிட்டு இருக்கு!
- Lifestyle
உங்க சருமம் பளபளன்னு ஜொலிக்கவும் முடி நீளமா வளரவும் பப்பாளியை எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா?
- Technology
Android போன்களுக்கு புது சோதனை.! 'இதை' செஞ்சுடாதீங்க.! மானம், பணம் எல்லாமே போய்விடும்.! எச்சரிக்கை.!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
முத்தக்காட்சி,படுக்கையறை காட்சி.. இருந்ததால் நடிக்கவில்லை..இப்போது நினைத்து புலம்பும் பார்வதி நாயர்!
சென்னை : முத்தக்காட்சி,படுக்கையறை காட்சிகள் இருந்ததால் அந்த படத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் ஆனால், இப்போது அதை நினைத்து மிகவும் வருத்தப்படுவதாக நடிகை பார்வதி நாயர் தெரிவித்துள்ளார்.
அஜித் நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண்விஜய்யுடன் ஜோடி போட்டு நடித்திருந்தார் பார்வதி நாயர்.
அடுத்ததாக பார்த்திபன் இயக்கத்தில் சாந்தனு பாக்கியராஜ் நடிப்பில் வெளியான கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார்.
பெண்கள்
மூடி
மூடி
வெச்சாத்தான்..திறந்து
பார்க்கத்
தோன்றும்..கோமாளி
பட
நடிகை
சர்ச்சை
பேச்சு!

பார்வதி நாயர்
அந்த படத்தைத் தொடர்ந்து கமலுடன் உத்தமவில்லன், மாலைநேரத்து மயக்கம், வாஸ்கோடகாமா, எங்கிட்ட மோதாதே என பல படங்களில் நடித்துள்ளார் . தமிழில் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் வந்துவிட்டார்.

சவாலான கதாபாத்திரம்
பார்வதி நாயர் நீண்ட தேடலுக்கு பின் நடிப்புக்கு சவால் தரும் வகையில் ரூபம் என்ற படத்தில் நடித்துள்ளார். தாமரைச்செல்வன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. திகிலூட்டும் திரைப்படமாக அமைந்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் ஆலம்பனா படத்திலும் நடித்துள்ளார்.

நடிக்க மறுத்துவிட்டேன்
இந்நிலையில்,ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள பார்வதி நாயர், அர்ஜுன் ரெட்டி படத்தில் நடிக்க தனக்குத்தான் முதலில் அழைப்பு வந்தாகவும், ஆனால், அந்த படத்தில் முத்தக்காட்சி மற்றும் படுக்கையறை காட்சிகள் இருந்ததால் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அந்த படம் இவ்வளவு பெரியஅளவில் வெற்றி பெறும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. படத்தை பார்த்த பிறகுதான் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என்று வருத்தப்பட்டேன்.

பெரிய தவறு செய்துவிட்டேன்
அது ஒரு அழகான படம். அந்த படத்தில் நடிக்க மறுத்து பெரிய தவறு செய்துவிட்டேன் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் ஒரு முறை தான் கதவை தட்டும் அப்போதே அந்த கதவை திறந்து வரவேற்றுக்கொள்ள வேண்டும் என்று நடிகை பார்வதி நாயர் அர்ஜுன் ரெட்டி படத்தில் நடிக்காததை நினைத்து இப்போது அழுது புலம்பி வருகிறார்.

காவல்நிலையத்தில் புகார்
நடிகை பார்வதி நாயர் சமீபத்தில் தனது வீட்டில் வேலை செய்த சுபாஷ் சந்திர போஸ் என்பவர் வீட்டிலிருந்து ரூ9 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 கைக்கடிகாரங்கள், ரூ1.5 லட்சம் மதிப்பிலான ஐபோன், ரூ2 லட்சம் மதிப்பிலான லேப்டாப் ஆகியவை திருட்டு போய் விட்டதாகவும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தன் பேரில் அந்த நபரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.