என்னை முழு நடிகையாக மாற்றியது மாரி கதாபாத்திரம் தான்… பூ நாயகியின் நெகிழ்ச்சி பதிவு !

கொச்சி : மலையாள சினிமாவை தனது அசாத்தியமான நடிப்பின் மூலம் அசர வைத்து பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பார்வதி திருவோது.

என்னு நின்டே மொய்தீன், சார்லி, டேக் ஆப், உயரே, வைரஸ், ஹலால் லவ் ஸ்டோரி என சமீபத்தில் இவர் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்கள் விருதுகளை மட்டுமல்லாமல் வசூலையும் வாரி குவித்து வருகிறது.

இந்த நிலையில் இவர் தமிழில் முதன்முறையாக அறிமுகமான பூ திரைப்படத்தைப் பற்றி பல ஆண்டுகளுக்குப் பிறகு நெகிழ்ந்து போட்டுள்ள பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பூ படத்தின்

பூ படத்தின்

மலையாளத் திரையுலகில் தனது அசாத்தியமான நடிப்புத்திறமையின் மூலம் கதிகலங்க வைத்து வரும் நடிகை பார்வதி தமிழுக்கு பூ படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார்.

மாரி கதாபாத்திரம்

மாரி கதாபாத்திரம்

இயக்குனர் சசி இயக்கத்தில் உருவான பூ திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 12 ஆண்டுகளைக் கடந்த பிறகும் பலரது விருப்ப திரைப்படமாக இருக்கும் இந்த கதையில் மாரி கதாபாத்திரம் அனைவரையும் ரசிக்க வைத்ததோடு அழவும் வைத்திருந்தது.

கண்முன் கொண்டு

கண்முன் கொண்டு

தமிழ் சினிமாவில் வெளியான ஆகச் சிறந்த திரைப்படங்களில் பூ திரைப்படமும் ஒன்றாக இன்று வரை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இதில் பார்வதி நிஜமாகவே மாரி கதாபாத்திரத்தை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருப்பார். அந்த அளவிற்கு தத்ரூபமாக இருக்கும் இவரது நடிப்பு.

மிகவும் பாதித்திருந்தது

மிகவும் பாதித்திருந்தது

வெயிலோடு போ என்ற குறும்படத்தை அடிப்படையாக கொண்டு உருவான பூ திரைப்படம் எழுத்தாளர் தமிழ்ச்செல்வனின் சிறு கதையைத் தழுவி எடுக்கப்பட்டது. இவ்வாறு பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு உருவான பூ திரைப்படத்தில் இயக்குனர் சசி, மாரி கதாபாத்திரத்தை பற்றியும் அதன் சாராம்சத்தை பற்றியும் என்னிடம் விவரிக்கும் பொழுது அது என்னை மிகவும் பாதித்தது, அதனால் தான் இந்த அளவிற்கு தத்ரூபமாக என்னால் நடிக்க முடிந்தது.

இதுவே விடையாகும்

இதுவே விடையாகும்

இன்று வரை தமிழ் ரசிகர்கள் என்னை பார்க்கும் போதெல்லாம் பூ திரைப்படத்தில் எனது கதாப்பாத்திரத்தை பற்றி புகழ்ந்து பேசும் கேள்விகளுக்கு இதுவே விடையாகும்.

இந்த ஒரு புகைப்படமே சாட்சி

இந்த ஒரு புகைப்படமே சாட்சி

மேலும் எனக்கு அப்பொழுது தமிழ் அந்த அளவுக்கு தெரியாத போதும், அடிப்படை தமிழை கொண்டு கதையை படிக்க இயக்குனர் சசி பெரும் உதவி செய்தார். இவ்வாறு கதாப்பாத்திரத்தை நான் முழுமையாக புரிந்து கொண்டதன் காரணமாக தான் அது என்னிடம் மிக இயல்பாக வெளிப்பட்டது என்றும் அதுவே என்னை முழு நடிகையாகவும் மாற்றியது என்பதற்கு இந்த ஒரு புகைப்படமே சாட்சி.

அளவு கடந்த அன்பு

அளவு கடந்த அன்பு

இன்று வரை பூ திரைப்படத்திற்கு பல கோடி ரசிகர்கள் இருந்து வரும் நிலையில் பல ஆண்டுகளுக்கு முன் நடித்த மாரி கதாபாத்திரத்தை பற்றி நெகிழ்ந்து பதிவிட்டுள்ள பார்வதியின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் அளவு கடந்த அன்பை லைக்குகளாக குவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: parvathy thiruvothu facebook
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X