»   »  நடிகை பூஜாவுக்கு தொழில் அதிபருடன் ரகசிய திருமணம்

நடிகை பூஜாவுக்கு தொழில் அதிபருடன் ரகசிய திருமணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை பூஜாவுக்கு ரகசியமாக திருமணம் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜே ஜே படம் மூலம் கோலிவுட் வந்தவர் இலங்கையை சேர்ந்த நடிகை பூஜா. அவரது தாய் இலங்கையை சேர்ந்தவர், தந்தை கர்நாடகாவை சேர்ந்தவர். பெங்களூரில் படித்த பூஜா தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, சிங்கள மொழிப் படங்களில் நடித்து வந்தார்.

Actress Pooja gets married secretly

அவருக்கும் இலங்கையை சேர்ந்த தொழில் அதிபர் தீபக் சண்முகநாதனுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் தங்களுக்குள் ஒத்துப் போகாது என்று கூறி பிரிந்துவிட்டனர்.

இந்நிலைில் பூஜாவுக்கும், தீபக்கிற்கும் கொழும்புவில் ரகசியமாக திருமணம் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பூஜா தமிழில் அஜீத், ஆர்யா உள்ளிட்டோருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

அவர் கடைசியாக கடந்த 2014ம் ஆண்டு வெளியான கடவுள் பாதி மிருகம் பாதி படத்தில் கவுரவத் தோற்றத்தில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
According to reports, Sri Lanka based actress Pooja has got married to a businessman in a hush hush ceremony in Colombo.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil