கோடிக்கணக்கில் சம்பளம்..வீட்டை சொர்க்க பூமியாக மாற்றிய பூஜா ஹெக்டே..வாய்பிளந்து பார்க்கும் பேன்ஸ்!

சென்னை : தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவரான பூஜா ஹெக்டே கோடிக்கணக்கான பணத்தை செலவழித்து தனது வீட்டை அழகுப்படுத்தி உள்ளார்.

மிஸ்கின் இயக்கத்தில் உருவான முகமூடி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இதுவரை 15 படங்களில் நடித்துள்ளார்.

விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் தமிழ்ப் படங்களில் அடுத்தடுத்து கமிட்டாக முடியும் என்று எதிர்பார்த்து பூஜா ஹெக்டே காத்திருந்த நிலையில், படத்திற்கு நெகடிவ் கமெண்டுகள் வந்தால், தமிழில் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாமல் போனது.

பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டே

தமிழில் ராசி இல்லாத நடிகை என பெயர் எடுத்த பூஜா ஹெக்டே மீண்டும் தெலுங்கு பக்கம் சென்றார். தற்போது இவர் சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து தயாரித்து வரும் ஜன கன மன என்ற படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஒப்பந்தமாகி உள்ளார்.

அதிரடி ஆக்ஷன் காட்சிகள்

அதிரடி ஆக்ஷன் காட்சிகள்

அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படத்தில், பூஜாவுக்கு மிரட்டலான ஒரு ஆக்ஷன் காட்சி இருப்பதாக கூறப்படுகிறது. அந்த அக்ஷன் காட்சிக்காக வெளிநாட்டு பயிற்சியாளரிடம் தீவிர ஆக்ஷன் பயிற்சி எடுத்து வருகிறார். சமீபத்தில் இவருக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதை அடுத்து அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார்.

வீடா சொர்க்க பூமியா?

வீடா சொர்க்க பூமியா?

இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே கோடிக்கணக்கில் செலவு செய்து தனது வீட்டை குட்டி சொர்க்க பூமியாக மாற்றியுள்ளார். ஏசியன் பெயிண்ட்ஸ் வெர் தி ஹார்ட் இஸ் நிறுவனத்திற்காக ஹோம் டூர் நடத்தி உள்ளார். அந்த வீடியோவில் கதவை திறந்து அழகான வார்த்தைகளால் ரசிகர்களை வீட்டிற்குள் அழைத்து செல்கிறார் பூஜா ஹெக்டே.

பளிங்கு சமையல் அறை

பளிங்கு சமையல் அறை

வீட்டிற்குள் சென்றதும் ஆறு இருக்கைகள் கொண்ட சாப்பாட்டு மேஜை நம்மை அழகாக வரவேற்கிறது. மேலும், அறையின் ஜன்னல் மெல்லிய வெள்ளை நிற திரைகளால் மூடப்பட்டிருக்கிறது. அறையின் மறுபுறம் சமையலறை, பளிங்கு பூச்சுடன் ஒரு தீவு போல பரந்து விரிந்து இருக்கிறது. சமையலறை அலமாரிகள் ப்ளூ மற்றும் வெள்ளை கவுண்டர்கள் உள்ளன.

வாய் பிளந்த ரசிகர்கள்

வாய் பிளந்த ரசிகர்கள்

பூஜாவின் படுக்கையறையில் அவர் விரும்பிய அனைத்து படங்களின் போஸ்டர்களையும் தொங்கவிடப்பட்டுள்ளன. படுக்கையறையில் பட்டு போல பஞ்சு மொத்தையும், பார்வையாளர்களுக்கான பெஞ்ச் மற்றும் ப்ரொஜெக்டர் திரையும் உள்ளது. மேலும்,அலங்கர விளக்குகள் பிரமிக்கவைக்கும் இன்டிரீயர் டிசைன்கள் என ஒவ்வொன்றும் நமது கண்ணுக்கு விருந்தாக இருந்தன. இந்த வீட்டை பார்த்த ரசிகர்கள் ஏக்கத்துடன் இது வீடா சொர்க்க பூமியா என மொய்மறந்து ரசித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X