பொண்டாட்டி.. பையனுடன் வேம்புலி.. மகிழ்ச்சியில் பூஜா ராமச்சந்திரன்!

சென்னை: சார்பட்டா படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் மிரட்டிய மலையாள நடிகர் ஜான் கோகெனின் காதல் மனைவி தான் பூஜா ராமச்சந்திரன். தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த பூஜா ராமசந்திரன் பின் நடிகையாக மாறினார். தமிழ், தெலுங்கு, மலையாள படங்களிலும் பிசியாக நடித்து வரும் இவர் தனது குழந்தையுடன் இருக்கும் க்யூட்டான போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

சினிமாவில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும். ஆனால், அந்த திறமையையும் தாண்டி லக் என்ற விஷயம் எப்போது வருகிறதோ, அப்போது தான் வாய்ப்புகள் குவியும் அப்படி வந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டவர் தான் பூஜா ராமச்சந்திரன். தொகுப்பாளினியாக இருந்த இவர், காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, காஞ்சனா 2, நண்பேன்டா உள்ளிட்ட தமிழ் படங்களிலும், ரா, தேவி ஸ்ரீ பிரசாத், லா, தொச்சாய் உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும் சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார். நெட்ஃப்ளிக்ஸில் வெளியான அந்தகாரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அர்ஜுன் தாஸ் நடிப்பில் அமானுஷ்ய த்ரில்லர் திரைப்படமான இப்படம் ஓரளவு பேசக்கூடிய திரைப்படமாக இருந்தது.

pooja ramachandran instagram
Photo Credit:

நடிகை பூஜை ராமச்சந்திரன்: சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் பூஜா ராமச்சந்திரன் விஜே கிரைக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017 ஆம் ஆண்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். இதை தொடர்ந்து கேரளாவை சேர்ந்த நடிகர் ஜான் கோகெனுடன் நட்பு ஏற்பட்டு பின் அது காதலாக மாறியதை அடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து 2023 ஆம் ஆண்டு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

அம்மாவைப்போலவே அழகு: இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பூஜா ராமச்சந்திரன், கணவருடன் இணைந்து ஒர்க் அவுட் செய்வது, பீச் போட்டோஸ் என எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். தற்போது பூஜை ராமச்சந்திரன் தனது குடும்பத்தோடு ஓணம் பண்டியை கொண்டாடி உள்ளார். அந்த போட்டோவை தற்போது இணையத்தில் அவர் பதிவிட்டுள்ளார். மேலும், அதில், இது ஓணம் பண்டிகைக்கு எடுத்த போட்டோஸ், அதோடு இன்னும் சில போட்டோக்களை சேர்ந்து ஷேர் பண்ணி இருக்கிறேன். கிகோவோட ஓணம் சூப்பர ஜாலியா போச்சு, அவனை வேட்டி கட்ட 2 மணி நேரம் ஆச்சு. அப்புறம் நாங்க வீடு திரும்பும் வரைக்கும் அதை அவன் கழட்ட அழவே இல்ல. போன வருஷம் அவர் ஓணா சத்யா நல்லா சாப்பிட்டார், இந்த வருஷம் அவர் அதை தொடவே இல்ல. கொஞ்சம் சிப்ஸ், பாயாசம் மட்டும் தான் சாப்பிட்டான் என பதிவிட்டுள்ளார். அந்த க்யூட்டான அழகான போட்டோவை பார்த்த இணையவாசிகள், அடடா... மகன் எவ்வளவு வளர்ந்துவிட்டான், மகன் உங்களைப் போலவே இருக்கான் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X