Don't Miss!
- News
அமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கிச்சூடு..72 வயது முதியவர் அரங்கேற்றிய கொடூரம்..ஷாக் கொடுக்கும் பின்னணி
- Automobiles
ஒரு ஆளுக்கு ஒரு கார் தான் வாங்கனும் மீறி வாங்குனா அதிகமா வரிகட்டனும்! கோர்ட்டில் தொடரப்பட்ட நூதன வழக்கு
- Lifestyle
மாவு பிசையும்போது இந்த 5 டிப்ஸை ஃபாலோ பண்ணா... பந்துபோல மென்மையான சப்பாத்தி வருமாம்...!
- Technology
இந்தியாவில் கம்மி விலையில் 2 போன்களை இறக்கிவிடும் Motorola.! காத்திருப்போம்.!
- Sports
4 போட்டிகளில் விளையாட தடையா?.. இஷான் கிஷானுக்கு வந்த பெரும் சிக்கல்.. விளையாட்டு விணையானது எப்படி?
- Finance
ஊழியர்களை ஏன் பணி நீக்கம் செய்றீங்க..அப்படி செய்யாதீங்க.. அஷ்னீர் குரோவரின் பரிந்துரைய பாருங்க!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
பாத்டப்பில் கும்முனு படுத்துக்கிடக்கும் பிரியா பவானிசங்கர்..கொஞ்சம் கூட செட்டாகல..இதுக்கு இதெல்லாம்!
சென்னை : பாத் டப்பில் புடவையுடன் படுத்து இருக்கும் பிரியா பவானி சங்கரை ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து வந்த நடிகை பிரியா பவானி சங்கர் இப்பொழுது டாப் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் ஆடியன்சை வளைத்துப்போட்ட அம்மணி தற்போது டோலிவுட்டிலும் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
தெலுங்கில்
அறிமுகமாகும்
பிரியா
பவானி
சங்கர்...யாருக்கு
ஜோடி
தெரியுமா?

பிரியா பவானி சங்கர்
சினிமா என்னும் மாய உலகில் ஜொலிப்பதற்கு லக் மிகவும் முக்கியமான ஒன்றாகும். என்னதான் அழகும், திறமையும், நடிப்பின் மீது ஆர்வமும் இருந்தாலும் லக் என்று ஒன்று இல்லை என்றால், சினிமாவில் ஜெயிக்க முடியாது. அப்படி தனக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டவர் தான் பிரியா பவானி சங்கர்.

கைவசம் உள்ள படம்
சின்ன திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்த பிரியா பவானி சங்கர், இன்று வெள்ளித்திரையில் சீனியர் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் ஏராளமான படங்களை கையில் வைத்துக்கொண்டு இருக்கிறார். இவர் கைவசம் அகிலன், ருத்ரன், பொம்மை, பத்துதல, இந்தியன் 2 போன்ற படங்கள் உள்ளன. இது மட்டும் பிரபல தெலுங்கு நடிகர் சத்யதேவ் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

ஹிட் மூவீஸ்
மான்ஸ்டர், மாபியா, களத்தில் சந்திப்போம், கசடதபற, ஓமணப் பெண்ணே, ஹாஸ்டல் என பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் ரசிகர் மத்தியில் தனி கவனத்தைப் பெற்றன. அருண் விஜய்க்கு ஜோடியாக யானை படத்திலும், திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார்.

தயாரிப்பாளர்களின் முதல் சாய்ஸ்
தமிழ் சினிமாவின் ராசியான நடிகை என பெயர் எடுத்த அம்மணியை பல தயாரிப்பாளர்களுக்கும் பிடித்து விட்டதாம். ஏராளமான படங்களை கையில் இருக்கும் போதும் சம்பளத்தை உயர்த்தாமல், தயாரிப்பாளர் தரும் சம்பளத்திற்கு , பேரம் பேசாமல் ஒகே சொல்வதால், பிரியா பவானி பல தயாரிப்பாளர்களின் முதல் சாய்ஸாக உள்ளார்.

கொஞ்சம் கூட செட்டாகல
படங்களில் பிஸியாக நடித்து வரும் இன்ஸ்டாவிலும் அடிக்கடி போட்டோவை அப்லோடு செய்து வருகிறார். தற்போது, இவர் எட்டு முழச்சேலையை இழுத்து சுற்றிக்கொண்டு பாத் டப்பில் படுத்தபடி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் கூட செட்டாகல, இதுக்கு இதெல்லாம் என பிரியா பவானி சங்கரை கிண்டலடித்து வருகின்றனர்.