இஸ்லாமியருடன் திருமணம்.. மதம் மாற மறுப்பு.. பல பிரச்சனை சந்தித்த நடிகை!
சென்னை: தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத நடிகையாக வலம் வந்தவர், தான் அந்த தேசிய விருது பெற்ற நடிகை. இஸ்லாமியரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், திருமணத்திற்கு பிறகு மதம் மாற வேண்டுமென, விமர்சனங்கள் எழுந்த போதும் அதைப்பற்றி கவலைப்படாமல், பல எதிர்ப்புகளை தாண்டி கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கண்களால் கைது செய், என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் பிரியாமணி. அந்த படத்தின் தலைப்புக்கு ஏற்றார் போல அழகான கண்களை கொண்டவராக இருந்தார் ப்ரியாமணி. அந்த படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த பிரியாமணிக்கு அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படம் அமைந்தது. அந்த திரைப்படத்தில் இவரின் அட்டகாசமான நடிப்பை பலரும் பாராட்டினார்கள். அந்த அளவுக்கு கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்திருந்த பிரியாமணி. இந்த படத்திற்கு தேசிய விருது, தமிழக அரசின் விருது உள்பட பல்வேறு விருதுகள் கிடைத்தன.

நடிகை பிரியாமணி: பருத்திவீரன் திரைப்படத்தை தொடர்ந்து மலைக்கோட்டை,தோட்டா, நினைத்தாலே இனிக்கும், ராவணன் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்த பிரியாமணி. பாலிவுட் பக்கம் சென்று அங்கு கணிசமான படங்களில் நடித்து பெயர் எடுத்தார். ரசிகர்களின் ஆதரவை பெற்ற தி ஃபேமிலி மேன் வெப் தொடரில் நடித்திருந்தார். தற்போது விஜய் நடித்துவரும் ஜனநாயகம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏன் இத்தனை வெறுப்பு: நடிகை பிரியாமணி 2017 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான முஸ்தஃபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டதால் நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியதைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். முஸ்லிம் ஒருவரை இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டதால், சமூக வலைதளங்களில் பலவிதமான விமர்சனங்களும் வெறுப்புகளும் எழுந்தன. பிரியாமணி மதம் மாறாமல் இருந்ததால், பலவிதமான எதிர்ப்புகளும், விமர்சனங்களும் வந்தன. ஆனால் அதைப் பற்றி கவலைப்படாத பிரியாமணி. நான் கணவரின் மதத்திற்கு மாற வேண்டிய அவசியமில்லை, நாங்கள் எந்த மதத்தை சார்ந்தவர்கள் என்பதை பொருட்படுத்தாமல் தான் இருவரும் காதலித்தோம். ஆனால், ஏன் இதற்கு வெறுப்பு ஏற்படுகிறது என்று தெரியவில்லை. நான் முஸ்லிமாக மாறிவிட்டேனா என கேட்கிறார்கள், நான் மாறிவிட்டேன் என்பதை எப்படி தீர்மானிக்கிறார்கள். திருமணத்திற்கு முன்பே நான் இந்துவாக என் வாழ்க்கையை தொடர்வேன் என்று கூறிவிட்டேன் என பிரியாமணி ஒரு பேட்டியில் பதிலளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











