Priyamani: அவருக்காக கையை வெட்டவும் ரெடி.. பிரியா மணி சொன்ன அந்த விஷயம்!
சென்னை: பருத்திவீரன் படத்தில் சிறந்த நடிப்புக்காக தேசிய விருதை பெற்ற நடிகை பிரியாமணி, தமிழ் தாண்டி தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது பிரியா மணி, தி ஃபேமிலி மேன் தொடரின் மூன்றாவது சீசனில் நடிகர் மனோஜ் பாஜ்பாயுடன் இணைந்து மீண்டும் நடிக்கிறார். இந்தத் தொடரில் சுசி கதாபாத்திரத்தில் பிரியாமணி நடிப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சுசி என்ற கதாப்பாத்திரத்தின் பல்வேறு பரிமாணங்கள் குறித்தும், நடிகர் அரவிந்த் சுவாமியுடன் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் பிரியாமணி சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார்.
அதில் பேசிய பிரியாமணி, சுசி ஒரு துஷ்டத்தனமான மனைவி என்று பலர் பேசுகிறார்கள். ஆனால், என் பார்வையில் அவள் அப்படி இல்லை. அவளுடைய உணர்வுகள், அவளுடைய கோபம், அவளுடைய மனக்குழப்பங்கள் அனைத்தும் ஒரு சாதாரண குடும்பத் தலைவிக்கு ஏற்படும் உணர்வுகளே. தற்போதைய சமூகத்தில் இது இயல்புதான், சுசியின் பாத்திரம் ஒரு யதார்த்தமான கோணத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

நடிகை பிரியா மணி: இரண்டாவது சீசனில் சுசியும் அரவிந்த் சுவாமியின் பிரகாஷும் நெருக்கமாக இருந்த காட்சிகள் விமர்சனத்துக்குள்ளாகினது. இது குறித்து பேசிய பிரியாமணி, அந்தக் காட்சி தேவைப்பட்டது. அது கதையின் ஒரு பகுதியாக இருந்தது. அது சுசியின் குணாதிசயங்களை மேலும் விளக்க உதவியது, சுசியின் கதைக்களத்தில் பிரகாஷ் கதாபாத்திரம் ஒரு முக்கிய பங்கு வகித்தது. அரவிந்த் சுவாமியுடன் இணைந்து நடித்தது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. அரவிந்த் சுவாமி போன்ற ஒரு நடிகருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. அவர் ஒரு அற்புதமான நடிகர், மிகச் சிறந்த மனிதர் என்றார்.
கையை வெட்டவும் தயார்: இதைத்தொடர்ந்து, எந்த இயக்குநரில் படத்தில் நடிக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரியா மணி. எனக்கு மணிரத்னம் சார் மிகவும் பிடித்தமான நடிகர். அவரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தால், அவரது படத்தில் நடிக்க என் கையை வெட்டவும் நான் தயாராக இருக்கிறேன். அவரது படத்தில் நடிப்பது ஒரு பெரிய ஆசீர்வாதம். அதை நான் என் அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். அது எந்த மாதிரியான கதாபாத்திரமாக இருந்தாலும் அதுபற்றி கவலை இல்லை, அவருடைய படத்தில் நடிக்க வேண்டும் என்று பிரியா மணி அந்த பேட்டியில் பேசி உள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











