»   »  மும்பை தொழிலதிபரை மணந்தார் நடிகை ப்ரியாமணி!

மும்பை தொழிலதிபரை மணந்தார் நடிகை ப்ரியாமணி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: பிரபல நடிகை ப்ரியாமணிக்கும் மும்பை தொழிலதிபருக்கும் நேற்று பெங்களூரில் திருமணம் நடந்தது.

தமிழ், தெலுங்கு, கன்னட பட உலகில் முன்னணி கதாநாயகி ப்ரியாமணி. 2004-ம் ஆண்டு பாரதிராஜாவின் 'கண்களால் கைது செய்' படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். 'பருத்திவீரன்' படத்தில் நடித்ததன் மூலம், சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.

Actress Priyamani weds Mumbai businessman

தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்த ப்ரியாமணிக்கு இப்போது 33 வயதாகிறது. இடையில் ப்ரியாமணிக்கும், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் முஸ்தபா ராஜுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் ஒரு வருடமாக ரகசியமாக காதலித்து வந்தார்கள்.

பின்னர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இவர்கள் திருமணத்துக்கு இரு வீட்டு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.

ப்ரியாமணி-முஸ்தபா ராஜ் திருமணம் பெங்களூருவில் நேற்று எளிய முறையில் நடந்தது. சிவாஜி நகரில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று இருவரும் மாலை மாற்றி பதிவு திருமணம் செய்து கொண்டார்கள். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர் மட்டுமே இதில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.

இதில் திரையுலகினர் பலரும் பங்கேற்கிறார்கள். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் என்று ப்ரியாமணி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Popular actress Priyamani has married businessman Mustafa Raj on Wednesday at Bangaloru

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil