Raai lakshmi: இதெல்லாம் ரொம்ப டூ மச்.. இத்தாலி தீவில் ராய் லட்சுமியின் கிளுகிளு போட்டோஸ்!

சென்னை: பெங்களுரில் பிறந்தராய் லட்சுமி, தமிழ் படங்கள் மட்டுமில்லாமல், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மொழி படங்களில் நடித்து வருகிறார். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த ராய் லட்சுமிக்கு, சினிமா மீது இருந்த ஆர்வத்தால், மாடலிங்கில் நுழைந்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு புரூ காஃபி விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதன் பின் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர்அண்ட் லவ்லி விளம்பரத்திலும் நடித்துள்ளார்.

விளம்பரங்களில் நடித்து வந்த ராய் லட்சுமிக்கு, கற்க கசடற திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் விக்ராந்த்துடன் ஜோடியாக அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். காதல் கதை அம்சத்தை கொண்ட அந்த படம், சரியான வரவேற்பை பெறாமல் தோல்விப்படமானது. முதல் படமே தோல்விப்படமானதால், அடுத்த படத்திற்கான வாய்ப்பு வராமல் போனது. ஆனால், நம்பிக்கையுடன் தமிழில் நிச்சயம் பெயர் சொல்லும் அளவிற்கு படவாய்ப்பு வரும் என காத்திருந்த ராய் லட்சுமிக்கு தமிழில் படவாய்ப்பு வரவே இல்லை. ஆனால், தெலுங்கு பக்கம் சென்ற ராய் லட்சுமி, காஞ்சனா கேபிள் டிவி என்ற படத்தில் நடித்தார். ஆனால், அந்த படமும் வெற்றி பெறவில்லை.

raai lakshmi photos
Photo Credit:

நடிகை ராய் லட்சுமி: இதன்பின் ஜெயம் ரவியுடன் தாம்தூம் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார். அந்த ரோல் அவ்வளவாக பேசப்படவில்லை என்றாலும், அந்த படத்தில் இடம் பெற்ற யாரோ மனதிலே பாடல் இவருக்கு தமிழ் ஆடியன்ஸ் மனதில் இடத்தை பிடிக்கவைத்தது. அதன் பின், முத்திரை, மங்காத்தா, வாமனன், நான் அவன் இல்லை 2, ஒரு காதலன் ஒரு காதலி என தமிழில் அடுத்தடுத்து படத்தில் கமிட்டானார். ஆனால், இவர் நடித்த எந்த படமும், இவருக்கு ஒரு அடையாளத்தை தரவில்லை. திறமையும் அழகும் இருந்தும், சரியான கதைகளை தேர்வு செய்யாததால் அவரால் சினிமாவில் பெரிதாக வளரமுடியாமல் போனது.

ஐட்டம் பாடலுக்கு டான்ஸ்: தமிழ், தெலுங்கு என எதுவும் வேலைக்கு ஆகாததால், பாலிவுட் சென்ற லட்சுமி ராய், அங்கு ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சியாக ஆட்டம் போட்டு ஓரளவிற்கு சம்பாதித்து வந்தார். பின் லெஜண்ட் சரவணன் நடித்த தி லெஜண்ட் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். அதைத்தொடர்ந்து, மலையாளத்தில் டிஎன்ஏ என்ற படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருந்தார். மேலும் பாய்சன் 2 என்ற வெப் தொடரிலும் நடித்திருந்தார். எந்த பக்கம் போனாலும், பட வாய்ப்பு எதுவும் வராததால், பட வாய்ப்பை பெற தற்போது இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து கவர்ச்சி போட்டோக்களை மற்றும் வீடியோவை பகிர்ந்து வருகிறார்.

குவியும் லைக்குகள்: தற்போது ராய் லட்சுமிக்கு படமும் இல்லை, வருமானமும் இல்லை. ஆனால், ஆடம்பரத்திற்கு குறைவு இல்லாமல் எப்போதும் ராய் லட்சுமி வெளிநாட்டு டூர் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது, ராய் லட்சுமி இத்தாலிக்கு டூர் சென்றுள்ளார். அங்கு கப்பலில் இருந்த படி கவர்ச்சி தூக்கலாக இருக்கும் போட்டோ மற்றும் வீடியோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த இணையவாசிகள் அவருக்கு லைக்குகளை மலைபோல் குவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X