Don't Miss!
- News
நான் கிரிக்கெட் வீரர்! பவுலர்களை பார்த்து பயந்தால் வேலைக்கு ஆகுமா! அமமுக வேட்பாளர் சிவபிரசாத் பளிச்!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Lifestyle
வாய் துர்நாற்றத்திற்கு குட்-பை சொல்லணுமா? இதோ அதை தடுக்கும் சில இயற்கை வழிகள்!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
என்னை விட்டு போகாதே.. மேடையில் கையை பிடித்து இழுத்த ரோபோ சங்கர்... சமாதானப்படுத்திய ராய் லக்ஷ்மி!
சென்னை: மேடையில் தனது கையைப்பிடித்து இழுத்த ரோபோ சங்கரை நடிகை ராய் லக்ஷ்மி சமாதானப்படுத்தி விட்டு பேசச் சென்றார்.
ராய் லக்ஷ்மி தமிழில் நடிக்கும் சிண்ட்ரெல்லா படம் ஹாரர் பேய் படமாக உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் பிக்பாஸ் பிரபலமான சாக்ஷி அகர்வால், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சிண்ட்ரெல்லா' என்கிற பெயருக்காகவே நடித்தேன்... நடிகை லட்சுமி ராய் உணர்வுபூர்வமாக பேசிய தருணம்

3 ரோல்களில் ராய் லக்ஷ்மி
இந்தப் படத்தில் நடிகை ராய் லக்ஷ்மி 3 கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை வினோ வெங்கடேஷ் இயக்கியுள்ளார். இவர் சில ஆண்டுகள் எஸ்.ஜே.சூர்யாவிடம் பணிபுரிந்தவர். 'காஞ்சனா 2' படத்திற்கு இசை அமைத்த அஸ்வமித்ரா இசையமைத்திருக்கிறார்.

செய்தியாளர் சந்திப்பு
கடந்த ஆண்டே ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

பார்த்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கு
அப்போது பேசிய நடிகர் ரோபோ சங்கர் நடிகை ராய் லக்ஷ்மி மெழுகு சிலை போல் இருப்பதாக கூறினார். அவரை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது. அதனால்தான் வேகமாக அவரது பக்கத்தில் வந்து உட்கார்ந்துவிட்டேன் என்று கூறினார். அவரது பேச்சு சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.

என்னை விட்டு போகாதே
பின்னர் ராய் லக்ஷ்மி பேசுவதற்காக தனது இருக்கையில் இருந்து எழுந்தார். இதனால் அதிர்ச்சியான ரோபோ ஷங்கர் எங்க போற என்னை விட்டு போகாதே என்று ராய் லக்ஷ்மியின் கையைப் பிடித்து இழுத்தார். அவரை சமாதானப்படுத்திய ராய் லக்ஷ்மி தொடர்ந்து மேடையில் சிண்ட்ரெல்லா படம் குறித்தும் படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் பேசினார்.
Recommended Video

தலைப்பின் முக்கியத்துவத்தும்
அதாவது சிண்ட்ரெல்லா ஒரு திகில் படம் என்று கூறிய ராய் லக்ஷ்மி, இது வழக்கமான திகில் படங்களிலிருந்து வித்தியாசமாக இருக்கும் என்றார். காஞ்சனா மற்றும் அரண்மனை போன்ற படங்களுக்குப் பிறகு, இதுபோன்ற திரைப்படங்களைத் தேர்வு செய்ய நான் தயங்கினேன். ஆனால் சிண்ட்ரெல்லா தலைப்பின் முக்கியத்துவத்தும் என்னை ஆச்சரியப்படுத்தியது என்று கூறினார்.

ரோபோ சங்கருடன் பணியாற்றியது
சிண்ட்ரெல்லாவின் வெற்றி இயக்குனர் வினோவின் கடின உழைப்பால் வந்தது. சிண்ட்ரெல்லா உடையில் நான் நடித்த காட்சி சவாலாக இருந்தது. பல நேரங்களில், அது மிகவும் கஷ்டமாகவும் இருந்தது. இந்த கடினமான காட்சிகள் முடிந்தவுடன், நகைச்சுவை காட்சிகளில் ரோபோ சங்கருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. இவ்வாறு நடிகை ராய் லக்ஷ்மி தெரிவித்தார்.