பணம் இருந்தா என்ன வேணும்னாலும் செய்யலாம்.. வெளிநாட்டில் ஓவர் லூட்டி அடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி!
சென்னை: ஓரிரு திரைப்படத்தில் நடித்து வந்த சீரியல் நடிகை ரச்சிதா மகாலாட்சுமி,
ஃபயர் படத்திற்கு பிறகு வேறலெவலுக்கு போய்விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஃபயர் படத்தில் மழையில் கவர்ச்சி ஆட்டம் போட்ட ரச்சித்தாவை பலரும் கடுமையாக விமர்சித்தாலும், அந்த படத்தின் மூலம் மிகவும் பிரபலமாகிய ரச்சித்தா அவ்வப்போது வெளிநாட்டுக்கு டூர் சென்று ஆட்டம் போடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
சரவணன் மீனாட்சி சீரியலில் கிராமத்து பெண்ணாக பாவாடை தாவணியில் வலம் வந்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி, இல்லத்தரசிகளுக்கு பிடித்தமான நடிகையாக இருந்தார். அந்த சீரியல் வெற்றி பெற்றததைத் தொடர்ந்து, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார். சீரியலில் நடித்து வந்த ரச்சித்தாவிற்கு, கன்னட படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின் கோலிவுட்டில் உப்புக்கருவாடு படத்தில் கதையின் நாயகியாக நடித்தார்.

ரச்சித்தா மகாலட்சுமி: ரச்சித்தாவிற்கு சினிமாவில் பெரிய வாய்ப்பு வரவில்லை என்றாலும், ஆண்டுக்கு ஒரு படம் என நடிதுக் கொண்டு இருந்தார். அந்த வாய்ப்பை அதிகரிக்க, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவரின் அமைதியான முகமும், கனிவான பேச்சும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. தன் விளையாட்டிலேயே கவனமாக இருந்த ரச்சித்தா, கடுமையான சைக்கிள் டாஸ்கில் மணிக்கணக்கில் சைக்கிளை விட்டு இறங்காமல் இருந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு ரசிகர்களின் எண்ணிக்கையும், பணமும் கணிசமாக வந்தது.
ஃபயர்: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழால், கன்னடத்தில் ரங்கநாயகா, தமிழில் எக்ஸ்ட்ரீம், தள்ளிமனசு ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஆனால், பட வாய்ப்பு இல்லாமல் இருந்த நேரத்தில், ரச்சித்தா மகாலட்சுமி, ஜே.எஸ்.சதீஷ் குமார் இயக்கி தயாரித்த ஃபயர் படத்தில், மீனாட்சி என்ற ரோலில் கணவனை இழந்த கைம்பெண்ணாக ரச்சித்தா நடித்திருந்தார். தமிழ்நாட்டில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில், ஒரு பாடல் காட்சியில் வெறும் சட்டையை மட்டுமே போட்டுக்கு பாலாஜி முருகதாசுடன் நெருக்கமான படுக்கை அறை காட்சியில் நடித்து இருந்தார். இந்த பாடல் வெளியானதும், இந்த பாடலைப்பார்த்த பலர், ரச்சித்தாவா இப்படி என அவரை திட்டி தீர்த்தனர்.
எல்லாமே பணம்: ஃபயர் படத்தின் மூலம் ரச்சித்தாவின் இமேஜ் குறைந்து இருந்தாலும், அந்த நெகட்டிவ் விமர்சனங்களால் முன்பைவிட அதிக அளவில் பிரபலமாகி விட்டார் ரச்சித்தா. இன்றைய காலகட்டத்தில் நெட்டிவ் விமர்சனங்கள் தான் பல நடிகைகள் பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில் ரச்சித்தாவும் புகழின் உச்சிக்கு சென்றுவிட்டார். இணையத்தில் எப்போதும், ஆக்டிவாக இருக்கும் ரச்சித்தா, நேரம் கிடைக்கும் போது எல்லாம் வெளிநாட்டுக்கு ஜாலியாக டூர் செல்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார். அந்த வகையில் தற்போது, அருவிக்கு மத்தியில் நின்று தண்ணீரில் ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ஃபேன்ஸ், பணம் இருந்தா என்ன வேணும்னாலும் செய்யலாம் போல என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











