கவர்ச்சி போய் தொழிலதிபராக கெத்து காட்டும் நடிகை ரம்பா: லைக்ஸை அள்ளும் ரம்பாவின் இன்ஸ்டா போஸ்ட்

சென்னை: தமிழ்த் திரையுலகில் தொன்னூறுகளின் காலக்கட்டத்தில் கவர்ச்சி கன்னியாக கலக்கி வந்தவர் ரம்பா.

ரம்பாவின் கவர்ச்சிக்கு கோலிவுட் ரசிகர்கள் தவம் கிடந்தனர் என்பது மறக்க முடியாத வரலாறு.

திருமணம் முடிந்த பின்னர் சினிமாவில் இருந்து விலகி இருக்கும் ரம்பா வேறொரு துறையில் ஜொலித்து வருகிறார்.

சினிமாவில் அறிமுகம்

சினிமாவில் அறிமுகம்

நடிகை திவ்யபாரதியின் மரணத்திற்குப் பின்னர் அவர் நடித்த படங்கள் பாதியில் நின்றன. அப்போது அவரைப் போல இருப்பதாகக் கூறி விஜயலட்சுமி என்பவரை கொண்டு படத்தை முடித்து வெளியிட்டனர் சில இயக்குநர்கள். திவ்யபாரதிக்குப் பதிலாக டூப் போடவந்த விஜயலட்சுமி, பின்னர் ரம்பாவாக பெயரை மாற்றிக்கொண்டு, பிரபு நடித்த உழவன் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

கவர்ச்சிக் கன்னியாக கலக்கல்

கவர்ச்சிக் கன்னியாக கலக்கல்

சுந்தர் .சி இயக்கத்தில் கார்த்திக்குடன் இவர் நடித்த உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தில் இடம்பெற்ற 'அழகிய லைலா' என்ற ஒரே பாடலின் மூலம், ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளையடித்த ரம்பாவிற்கு, கோலிவுட்டில் முக்கியமான இடம் கிடைத்தது, மேலும் அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. தொடர்ந்து அப்படியே ரஜினி, விஜய், அஜித், பிரபுதேவா என முன்னணி நடிகர்களுடனும் நடித்து ஒரு ரவுண்டு வந்தார்.

திருமணமும் விவாகரத்து சர்ச்சையும்

திருமணமும் விவாகரத்து சர்ச்சையும்

சினிமா வாய்ப்புகள் படிப்படியாக குறையவே, இலங்கை தமிழரான இந்திரன் என்பவரை 2010ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னர் இருவரும் கனடாவில் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு தற்போது இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர் ரம்பாவுக்கும் அவரது கணவர் இந்திரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவகாரம் சென்னை உயர்நீதிமன்றம் வரை சென்றது.

ஒன்று சேர்ந்த ஜோடிகள்

ஒன்று சேர்ந்த ஜோடிகள்

இந்நிலையில், திடீரென இருவரும் சேர்ந்து வாழ விரும்புவதாக மனு தாக்கல் செய்ததையடுத்து, இந்த வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. இதனையடுத்து தனது குடும்பத்தினருடன் ஜாலியாக பொழுதை கழித்து வரும் ரம்பா, அவர்களுடன் எடுக்கும் போட்டோஸையும் ஷேர் செய்து வருகிறார். இந்நிலையில், ரம்பாவுக்கு சொந்தமான தொழிற்சாலை சென்னையில் இருக்கிறது. அங்கு அவர் குடும்பத்துடன் இருக்கும் போட்டோக்கள் தற்போது வெளியாகி உள்ளன. முன்பு கவர்ச்சியில் கலக்கிய ரம்பா, இப்போது தொழிலதிபராக கெத்து காட்டுவதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X