Don't Miss!
- Finance
மத்திய பட்ஜெட் 2023: மோடி அரசின் 7 முன்னுரிமைகள் - நிர்மலா சீதாராமன்
- News
சபாஷ்.. விவசாயக் கடன் இலக்கு ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- Lifestyle
பட்ஜெட் 2023: இந்த ஆண்டு சிவப்பு நிற கைத்தறி புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- Technology
BSNL சூப்பர் ரீசார்ஜ்: மாதம் ரூ.184 தான் செலவு 395 நாளுக்கு வேலிடிட்டி.! மாஸ் ஆன பிளான் இதான்.!
- Automobiles
ஃப்ரீனாலும் இந்த 5 ரயில்கள்ல மட்டும் போயிடாதீங்க... போனவங்க எல்லாம் கழுவி கழுவி ஊத்துறாங்க!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கேக்கின் ஒவ்வொரு பகுதியிலும் காதல் கதை.. 10 வது திருமண நாளை அசத்தலாக கொண்டாடிய முன்னாள் ஹீரோயின்!
சென்னை: கொரோனா வைரஸ் பீதிக்கு இடையிலும் நடிகை ரம்பா, தனது 10 வது திருமண நாளை வீட்டில் கொண்டாடியுள்ளார்.
Recommended Video
தமிழில், கார்த்திக்கின் உள்ளைத்தை அள்ளித்தா, அர்ஜுனின் செங்கோட்டை, சுந்தர புருஷன், ரஜினியின் அருணாச்சலம், அஜித்தின் ராசி, விஜய்யுடன் நினைத்தேன் வந்தாய் உட்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ரம்பா.
தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழி படங்களிலும் நடித்த ரம்பா, கடைசியாக பெண்சிங்கம் என்ற படத்தில் நடித்திருந்தார்.
துல்கரின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்... டி.வியில் பார்க்கலாம்!

தொழிலதிபருடன் திருமணம்
பின்னர் கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் திருப்பதியில் நடந்தது. சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழ், தெலுங்கு திரையுலகினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணத்துக்குப் பின் நடிப்பதை நிறுத்திவிட்டார்.
View this post on InstagramA post shared by RambhaIndrakumar💕 (@rambhaindran_) on
திருமண நாள்
இவர்களுக்கு இப்போது லாவண்யா, சாஷா என்ற மகள்களும் ஷிவின் என்ற மகனும் உள்ளனர். தற்போது கனடாவில் வசித்து வரும் ரம்பா, ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 11 ஆம் தேதி, தனது திருமண நாளைச் சிறப்பாகக் கொண்டாடுவார். அதே போல இந்த வருடம் திருமண தினத்தை எளிமையாகக் கொண்டாடியுள்ளார்.

ஊரடங்கு
கொரோனா காரணமாக, உலக நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வீட்டுக்குள்ளேயே மக்கள் அடைந்து கிடக்கின்றனர்.

நண்பர்கள் இல்லாமல்
கொரோனா பாதிப்பு காரணமாக, யாரையும் அழைக்காமல் வீட்டிலேயே இந்த திருமண நாளை கொண்டாடியுள்ளதாகத் தெரிவித்துள்ளார் ரம்பா. இதுபற்றி அவரது இன்ஸ்டாகிராமில், ' உலகம் முழுவதும் தற்போதுள்ளச் சூழல் காரணமாக எங்களைச் சுற்றியுள்ள நண்பர்கள், உறவினர்கள் இல்லாமல் என் கணவர், குழந்தைகளுடன் திருமண நாளைக் கொண்டாடினோம்.

சிறந்த விழா
இதுவரை கொண்டாடியதிலேயே இது சிறந்த விழாவாக, நெருக்கமானதாக இருக்கிறது. நாங்கள் ஒன்றாக இணைந்து கேக் தயாரித்தோம். கேக்கின் ஒவ்வொரு பகுதியிலும் எங்களின் 10 வருட காதல் கதை இருக்கிறது. எங்கள் மகள்கள் சிறப்பு வாழ்த்து அட்டையை உருவாக்கி இருந்தார்கள். கடினமான காலங்களில் நாம் அன்போடும் மகிழ்ச்சியோடும் ஒற்றுமையாக இருக்க முடியும்.

மீனா, பானு
அதற்கு பணமோ பரிசுகளோ தேவையில்லை. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், உங்கள் நேரத்தை குடும்பத்தினருடன் செலவழியுங்கள் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு நடிகைகள் மீனா, பானு, ரம்யா சுப்ரமணியம் உட்பட பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். ஏராளமான ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.