Ramya Krishanan: கையில் சிகரெட்டுடன் ரம்யா கிருஷ்ணன்.. மந்திரவாதியா? பேயா? பயமுறுத்தும் லுக்!

சென்னை: நடிகை ரம்யா கிருஷ்ணனின் புதிய தோற்றம், அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பாகுபலி திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்த சிவகாமி கதாபாத்திரத்தின் ஆதிக்கமே இன்னும் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காமல் இருக்கும் நிலையில், அவரது இந்த திடீர் மாற்றம் பலரை வியப்படைய வைத்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ரம்யா கிருஷ்ணனின் இந்தப் புதிய தோற்றம், கையில் சிகரெட்டுடன், முகத்தில் பொட்டுகளுடன், ஜீன்ஸ் பேன்ட் அணிந்து ஒரு 'டாம் பாய்' ஸ்டைலில் காட்சியளிக்கிறது. இந்த மாஸான தோற்றம் இதற்கு முன் ரம்யா கிருஷ்ணன் நடித்த எந்தப் படத்திலும் இல்லாத முற்றிலும் புதிய அனுபவமாக உள்ளது.

Ramya krishnan Ram Gopal Varma
Photo Credit:

ரம்யா கிருஷ்ணனின் மாஸ் லுக்: இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது சமூக ஊடகப் பக்கத்தில் இந்தத் தோற்றத்தைப் பகிர்ந்து, "இதுதான் ரம்யா கிருஷ்ணனின் புதிய லுக்" என்று பகிர்ந்துள்ளார். மேலும், அவர் இந்தப் படத்தில் பேய் வேடத்தில் நடிக்கவில்லை என்றும், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். 'போலீஸ் ஸ்டேஷன் மே பூத்' என்ற தனது புதிய ஹாரர் த்ரில்லர் படத்திற்காகவே ரம்யா கிருஷ்ணன் இந்தத் தோற்றத்தை எடுத்துள்ளார். ராம் கோபால் வர்மா இயக்கும் இந்தப் படத்தில் மனோஜ் பாஜ்பாய் ஒரு போலீஸ் அதிகாரியாகவும், ஜெனிலியா தேஷ்முக் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.

ராம் கோபால் வர்மா: இந்தப் படம், ஒரு டான் இறந்த பிறகு எப்படிப் பேயாக மாறி போலீசாருக்குத் தொல்லை கொடுக்கிறான் என்பதை மையமாகக் கொண்டது. வழக்கமான ஹாரர் படங்களை போல் இல்லாமல், இது ஒரு காவல் நிலையப் பின்னணியில் உருவாகும் சைக்கலாஜிக்கல் ஹாரர் த்ரில்லராக இருக்கும் என்றும், இது ஒரு பயமுறுத்தும் கதை மட்டுமில்லாமல், சிஸ்டம் தொடர்பான ஒரு குறியீட்டு செய்தியையும் உள்ளடக்கிய கதையாக இருக்கும் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

போலீஸ் ஸ்டேஷன் மே பூத்: ரம்யா கிருஷ்ணனின் புதிய தோற்றமும், வர்மாவின் பதிவும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ராம் கோபால் வர்மாவின் விளம்பர உத்திகள் எப்போதுமே வித்தியாசமாக இருக்கும். சமீபத்தில், "நான் கைது செய்யப்பட்டு லாக்கப்பில் அடைக்கப்பட்டேன்" என்று ஒரு புகைப்படத்தை அவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஏன் ராம் கோபால் வர்மா கைது செய்யப்பட்டார் என பலரின் பதறிப்போன நிலையில், அது ஒரு விளம்பர யுக்தி என்று பின்னர் தெரியவந்தது. இப்போது, ரம்யா கிருஷ்ணனின் புகைப்படங்களைப் பகிர்ந்து, "இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் என்னவாக இருக்கும்? அவருடைய குணம் எப்படி இருக்கும்?" என்று யூகிக்கச் சொல்லி ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளார்.

குவியும் பாராட்டு: பாகுபலி படத்தில், சிவகாமி போன்ற ஒரு தெய்வீக கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், இப்படி ஒரு ரஃப் அண்ட் மாஸ் லுக்கில் தோன்றுவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிலர் "எங்கள் சிவகாமியை இப்படி மாற்றிவிட்டீர்களே?" என்று விமர்சித்தாலும், பெரும்பாலானோர் "ரம்யா கிருஷ்ணனின் மறு கண்டுபிடிப்பு" என்று பலரும் பாராட்டி வருகின்றனர். 'போலீஸ் ஸ்டேஷன் மே பூத்' திரைப்படம் 2026 இல் வெளியாக உள்ளது. ராம் கோபால் வர்மாவுக்கு இது ஒரு ரீ-என்ட்ரி திட்டமாக அமையும் என நம்பப்படுகிறது. அவரது முந்தைய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், இந்தப் படம் மூலம் அவர் தனது முத்திரையைப் பதிப்பாரா என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X