twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    போலி வீடியோ புகார்... சரமாரி கேள்வி... பதில் சொல்லாமல் வெளியேறிய ரஞ்சிதா!

    By Shankar
    |

    சென்னை: நித்யானந்தாவுடன் நான் இருப்பதாக வந்த வீடியோ போலியானது என்று பிரஸ் மீட் வைத்து புகார் கூறிய ரஞ்சிதா, நிருபர்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் பாதியில் வெளியேறினார்.

    நித்யானந்தா சாமியாருடன் ஆபாச படத்தில் தோன்றியதாக பரபரப்பாக பேசப்பட்ட நடிகை ரஞ்சிதா, சென்னை தியாகராயநகரில் உள்ள ஸ்டார் சிட்டி ஓட்டலில் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    ரஞ்சிதாவை பேட்டி காணவும், படம் எடுக்கவும் 300-க்கும் மேற்பட்ட நிருபர்கள், புகைப்படக்காரர்கள், வீடியோகிராபர்கள் குவிந்துவிட்டனர். கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் வந்திருந்தார் அவர்.

    முதலில் சிரித்தபடி அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து, தன் தரப்பு நியாயத்தை எடுத்து வைத்தார்.

    அவர் கூறுகையில், "நித்யானந்தாவுடன் நான் இருப்பதாக வந்த படம் போலியானது. இதை வெளியிட்டதன் மூலம் என் சொந்த வாழ்க்கை, சமூக வாழ்க்கை இரண்டையும் கொன்று விட்டார்கள். என்னை கேட்காமல், கற்பனையாக எழுதி, எனக்கு அவமானத்தையும், களங்கத்தையும் ஏற்படுத்தி விட்டார்கள்.

    சன் டி.வி.யிலும், தினகரன், நக்கீரன் ஆகிய பத்திரிகைகளிலும் அருவறுக்கத்தக்க ஆபாச படங்களை பிரசுரித்து, என் வாழ்க்கையை சீர்குலைத்து விட்டார்கள். ஆனால் இந்த பிரஸ்மீட்டுக்கு அவர்களே இங்கு வந்து இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

    168 வருட பாரம்பரியமுள்ள நியூஸ் ஆப் த வேல்டு' என்ற ஆங்கில பத்திரிகை, போன் கால்களை ஒட்டுக்கேட்ட குற்றத்துக்காக மூடப்பட்டது. அதுபோன்ற நடவடிக்கையை என் வாழ்க்கையை கெடுத்தவர்கள் மீது எடுக்க வேண்டும். என் தனிப்பட்ட கண்ணியத்தை சீர்குலைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஆச்சரியமாக இருக்கிறது.

    அந்த போலியான ஆபாச படங்களை வெளியிட்டபின், எனக்கு பாதுகாப்பு இல்லை. ஒன்றரை வருடங்களாக எனக்கு நீதி கிடைக்கவில்லை. அப்போது ஆட்சியில் இருந்தது எந்த அரசு என்று எல்லோருக்கும் தெரியும். அந்த அரசாங்கத்தில், எனக்கு பாதுகாப்பு இல்லாததால்தான் புகார் கொடுக்கவில்லை. புகார் கொடுத்திருந்தாலும் நடவடிக்கை எடுத்திருக்க மாட்டார்கள்.

    நான் சென்னையில் கால் வைக்கக்கூடாது என்று சிலர் மிரட்டினார்கள். சென்னைக்குள் வந்தால், உன் மீது வழக்கு போட்டு உள்ளே தள்ளி விடுவோம் என்று மிரட்டினார்கள். சிலர் பணம் கேட்டு மிரட்டினார்கள். சட்டத்தில் என்னென்ன உரிமைகள் இருக்கிறது? என்று எனக்கு தெரியாது.

    மதுரையில், தினகரன் பத்திரிகை அலுவலகம் தீவைத்து கொளுத்தப்பட்டு மூன்று பேர் எரிக்கப்பட்ட வீடியோ காட்சியை கோர்ட்டு 'டிஸ்மிஸ்' செய்தது. அதேபோல் என் சம்பந்தப்பட்ட போலியான வீடியோ காட்சிகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

    இப்போது எனக்கு தைரியம் வந்திருக்கிறது. தமிழக அரசு மீதும், முதல்வர் ஜெயலலிதா மீதும், போலீஸ் கமிஷனர் மீதும் முழுமையான நம்பிக்கை வந்திருக்கிறது.

    என் வாழ்க்கையை சீர்குலைத்த சன் டி.வி, தினகரன், நக்கீரன் பத்திரிகைகள், லெனின் கருப்பன் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது,'' என்று பேசினார்.

    அடுத்து அவரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர் நிருபர்கள்.

    பாதியில் வெளியேறினார்

    இந்த வீடியோக்கள் போலி என்பதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறீர்கள்? இந்த வீடியோ போலியானது அல்ல என தமிழக தடய அறிவியல் துறை மற்றும் பெங்களூர் சிபிசிஐடி போலீசார் உறுதிப்படுத்தியுள்ளார்களே?

    வீடியோவில் இருப்பது ரஞ்சிதாவும் நானும்தான் என நித்யானந்தா சிபிசிஐடிக்கு அளித்த வாக்குமூலத்தில் கூறியிருக்கிறாரே, அது பொய்யா?

    வீடியோ வெளியான உடன் தமிழக போலீசாரிடம் புகார் கூற முன்வராத நீங்கள், கர்நாடக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்தீர்களே, ஏன்?

    'தினகரன் பத்திரிகை வழக்கு எரிப்பு வீடியோ உண்மைதான், ஆனால் அதை ஒரு சாட்சியாக கோர்ட் ஏற்க மறுத்தது. அதுதான் உங்கள் சம்பந்தப்பட்ட வீடியோவின் நிலையும் என கூற வருகிறீர்களா?

    -இந்தக் கேள்விகளுக்கு சரிவர பதில் சொல்லாமல், பாதியிலேயே பிரஸ்மீட்டிலிருந்து வெளியேறினார் ரஞ்சிதா.

    English summary
    Actress Ranjitha who appeared in the alleged sex video with Nithyananda has meet the press and claimed that the video was fake. But she failed to reply the sharp questions raised by journalists and quit the press meet suddenly.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X