Raveena : 22வயசு ஆச்சு.. ரவீனா தாஹாவின் பர்த்டே பார்ட்டி போட்டோஸ்.. கையில் இருப்பது சரக்கா?

சென்னை: குழந்தை நட்சத்திரமாக ஜில்லா, ராட்சசன், தீரன் அதிகாரம் என பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரவீனா தாஹா. பல சீரியல்களில் நடித்து வந்த இவர், தற்போது தனது 22வது பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். அந்த போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை தொடங்கிய நடிகை ரவீனா தாஹா, ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா என்ற சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த சீரியலைத் தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மௌன ராகம் 2 சீரியலில் நடித்தார். இந்த சீரியல் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. அதன் பின், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து அனைவரையும் சிரிக்க வைத்தார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற ரவீனா, அங்கு 91 நாட்கள் வரை தாக்குப்பிடித்து இருந்தார்.

Raveena Daha Birthday
Photo Credit:

நடிகை ரவீனா தாஹா: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சிந்து பைரவி சீரியலில் ரவீனா கமிட்டாகி இருந்தார். இந்த சீரியலுக்கான ப்ரோமோவும் வெளியாகி தொடர் விரைவில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகை ரவீனா, அந்த சீரியலில் இருந்து விலகினார். இதன் காரணமாக, சீரியல் தயாரிப்பாளர்கள், சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தினர் நடிகை ரவீனா மீது புகார் கொடுத்ததை அடுத்து, அவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு, ஒருவருடத்திற்கு எந்த சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த சீரியலின் கதையை சொல்லும் போது எனக்கு முக்கியத்தும் கொடுக்கும் கதாபாத்திரமாக இருந்தது. ஆனால், அந்த கதையில் மற்றொரு நடிகைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இருந்ததால், சீரியலை விட்டு விலகிவிட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், ரவீனா தாஹா, தனது இன்ஸ்டாகிராமில் , அது என தனிப்பட்ட விருப்பம் என்று கூறியிருந்தார்.

பர்ட்டே பார்ட்டி: இதனால், சீரியலில் தலைகாட்டாமல் இருக்கும் ரவீனா,இன்ஸ்டாகிராமில் விதவிதமான பாட்டுக்கு ஆட்டம் போட்டு லைக்குகளை குவித்து வருகிறார். இவரின் ஆட்டத்தை பார்ப்பதற்கு என்றே தனிக்கூட்டம் இன்ஸ்டாகிராமில் இவரை பின் தொடர்ந்து வருகிறது. தற்போது, ரவீனா தாஹா, தனது 22வது பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். அந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவில் ரவீனா, கையில் கிளாசுடன் இருக்கும் போட்டோவை பார்த்த ரசிகர்கள் இது என்ன சரக்கா... என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X