ஆடி மாதத்தில் திடீரென அம்மனாக மாறிய ரேகா...காரணம் என்னன்னு தெரியுமா ?

சென்னை : 1980, 90 களில் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருந்தவர் ரேகா. 1984 ல் சத்யராஜ் நடித்த கடலோர கவிதைகள் படத்தில் குடைபிடித்தபடி, ஜெனிஃபர் டீச்சராக வந்து ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்தார். பாரதிராஜாவால் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரேகா, தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையானார்.

கன்னடம், தெலுங்கில் சில படங்களிலும் நடித்துள்ளார். முதலில் ஹீரோயினாகவும், பிறகு துணை நடிகையாக சில படங்களிலும் நடித்தார் ரேகா. இதுவரை 180 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ரஜினி, கமல், ராமராஜன், சத்யராஜ், பிரபு, கார்த்திக் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். பிறகு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு, சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.

நீண்ட காலத்திற்கு பிறகு விஜய் டிவி.,யில் நடைபெற்ற ரியாலிட்டி ஷோக்களான பிக்பாஸ் சீசன் 4, குக் வித் கோமாளி ஆகியவற்றில் போட்டியாளராக கலந்து கொண்டு, ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால் பிக்பாஸ் வீட்டில் சில வாரங்கள் மட்டுமே ரேகா தாக்குபிடித்தார். இவர் தனியாக யூட்யூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் வித்தியாசமான வீடியோக்களை வெளியிட்டு அசத்தி வருகிறார்.

இதுக்கு தான் அம்மன் வேடமா

இதுக்கு தான் அம்மன் வேடமா

இந்நிலையில் ஆடி மாதத்தை முன்னிட்டு Vlog ஒன்றை உருவாக்கி உள்ளார் ரேகா. அதில் வேப்பிலைக்காரி அம்மன் போல் வேடமிட்டு நடத்திய ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்களை பதிவிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அச்சு அசலாக அம்மன் போலவே காட்சி தரம் ரேகாவின் ஃபோட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வேப்பிலைக்காரி வேடம் ஏன்

வேப்பிலைக்காரி வேடம் ஏன்

இந்த ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமிலும் ரேகா பதிவிட்டுள்ளார். அத்துடன் அவர் பதிவிட்டுள்ள கேப்ஷனில், ஆடி மாதத்தில் அனைவரும் இயற்கையான முறையில் பாதுகாப்பாக இருக்க நம்மை சுற்றி வேப்பிலைகளை வைத்துக் கொள்ள வேண்டும். அவைகள் கிருமிகளையும், மற்ற தொற்றுகளையும் கொல்லும். அத்துடன் தீய சக்திகளை அழித்து, நமது ஆராவை நல்ல சக்திகளுடன் தூய்மையாக்கும். வேப்பிலைக்காரி வடிவத்தில் எனது ஆடி மாத ஸ்பெஷல் ஃபோட்டோஷுட் இது என குறிப்பிட்டுள்ளார். ரேகாவின் இந்த ஃபோட்டோஷுட்டை மற்றொரு பிக்பாஸ் பிரபலமான சுரேஷ் சக்கரவர்த்தி பாராட்டி உள்ளார்.

ரேகாவின் நீண்ட நாள் ஆசை

ரேகாவின் நீண்ட நாள் ஆசை

திடீரென இப்படி ஒரு ஃபோட்டோஷுட் நடத்த என்ன காரணம் என ரேகாவிடம் கேட்ட போது, நான் நடித்த காலங்களில் சாமி வேடங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் சாமி வேடத்தில் நடிக்க வேண்டும் என எனக்கு மிகவும் ஆசை. மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்தது என்னை மிகவும் கவர்ந்தது. அதனால் எனது நீண்ட கால கனவை நினைவாக்கவே ஆடி மாதத்தில் அம்மன் வேடத்தில் ஃபோட்டோஷுட் நடத்தினேன் என்றார்.

அதிக படங்களில் நடித்த நடிகை

அதிக படங்களில் நடித்த நடிகை

பொதுவாக தமிழ் சினிமாவில் அம்மன் வேடம் என்றாலே கே.ஆர்.விஜயா தான். மிக அதிகமான படங்களில் சாமி வேடங்களில் நடித்த நடிகை இவர் தான். அவரைத் தொடர்ந்து சிலர் ஓரிரு படங்களில் சாமி வேடங்களில் நடித்துள்ளனர். பிறகு நீண்ட காலமாக சாமி படங்கள் ஏதும் தமிழ் சினிமாவில் வராமல் இருந்தது. நீண்ட காலத்திற்கு வந்த முழு நீள பக்தி படமாக அம்மன் படம் அமைந்தது.

Recommended Video

AUTISM CHILDREN'S க்கு DOG PET நல்லது | REKHA DANDEY CHAT | FILMIBEAT TAMIL
அம்மனாக நடித்த ரம்யா கிருஷ்ணன்

அம்மனாக நடித்த ரம்யா கிருஷ்ணன்

நேரடி தமிழ் படம் இல்லை என்றாலும், தமிழ், தெலுங்கு என இரு மொழி ரசிகர்களிடம் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் அம்மனாக முதல் முறையாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து விட்டு பிறகு பல சாமி படங்கள் வரிசையாக வெளிவர துவங்கின. அவற்றிலும் ரம்யா கிருஷ்ணனே அம்மனாக நடிக்க ஆரம்பித்தார்.

இது பேய், த்ரில்லர் பட சீசன்

இது பேய், த்ரில்லர் பட சீசன்

ஒரு கட்டத்தில் ரம்யா கிருஷ்ணனே அம்மன் வேடங்களில் நடிக்க வேண்டாம் என முடிவு செய்து விட்டார். அதனால் அவரைத் தொடர்ந்து மீனா, ரோஜா ஆகியோரும் அம்மன் வேடங்களில் வரிசையாக நடித்தனர். அதன் பிறகு பக்திப்படங்களின் எண்ணிக்கை குறைந்து, பேய் படங்கள், த்ரில்லர் படங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது மீண்டும் சாமி ரோல்களுக்கு பிள்ளையார் சுழி போடுவது போல் ஃபோட்டோஷுட்டை நடத்தி உள்ளார் ரேகா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X