»   »  5 ஆயிரம் முறை பாருங்க... ஒருநாள் முழுக்க என்கூட இருங்க...! - நடிகையின் அடேங்கப்பா ஆஃபர்

5 ஆயிரம் முறை பாருங்க... ஒருநாள் முழுக்க என்கூட இருங்க...! - நடிகையின் அடேங்கப்பா ஆஃபர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: இதுவரை இந்தியாவிலேயே இப்படி ஒரு ஆஃபர் வந்ததில்லை என்று சொல்லலாம். அப்படி ஒரு வித்தியாசமான ஆஃபரை அறிவித்து பரபரப்பாகி விட்டார் தெலுங்கு நடிகை ரேஷ்மி கௌதம்.

தமிழிலும் நடித்தவர்தான் ரேஷ்மி கவுதம். கண்டேன், மாப்பிள்ளை விநாயகர் படங்களில் நடித்தவர். தமிழில் அதற்கு பின் வாய்ப்பில்லாததால் தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்துகிறார். அவர் நடித்திருக்கும் நெக்ஸ்ட் நுவ்வு என்னும் படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்த படத்தை 5 ஆயிரம் முறை பார்ப்பவருடன் ஒருநாள் டேட்டிங் செல்ல தயாராக இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

Actress Reshmi Goutham's dating offer

இதை தன்னுடைய குரலில் வீடியோவாக எடுத்து ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார். நடிகையுடன் டேட்டிங் என்றால் சும்மா இருப்பார்களா? இப்போதே முன்பதிவு செய்ய தொடங்கியிருக்கிறார்கள். 5 ஆயிரம் டிக்கெட்டுகளும் 5 லட்சம் ரூபாய் வரும்.

ஒன்றுக்கு மேற்பட்ட ரசிகர்கள் இந்த சேலஞ்சில் ஜெயித்தால் ரேஷ்மியின் நிலை என்ன ஆகுமோ தெரியலையே?

English summary
Telugu actress Rashmi Gautam has announced an offer for dating with whom watch her upcoming movie 5000 times.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil