இளையராஜா 75.. மேடையிலேயே திட்டிய இளையராஜா.. ஒரு மாதத்திற்குப் பின் விளக்கம் தரும் நடிகை ரோகிணி!
இளையராஜா திட்டியது தொடர்பாக நடிகை ரோகிணி விளக்கமளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: இளையராஜா 75 விழா மேடையில் இளையராஜா கோபமாக பேசியதை தான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என நடிகை ரோகிணி தெரிவித்துள்ளார்.
இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி கடந்தமாதம் சென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. அதில், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரோகிணியை மேடையிலேயே இளையராஜா கோபமாக திட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இயக்குநர் ஷங்கரின் படத்திற்கு எப்போது இளையராஜா இசையமைப்பார் எனக் கேட்டதற்காக ரோகிணியிடம் கோபமாக பேசினார் இளையராஜா. இதை சற்றும் எதிர்பாராத ரோகிணி அதிர்ச்சி அடைந்தார். விழா மேடையில் இப்படி இளையராஜா கோபப்பட்டதால் பார்வையாளர்களும் ரோகிணியைப் போலவே அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இளையராஜாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் நெட்டிசன்கள் கருத்துப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், சுமார் ஒரு மாதத்திற்குப் பின் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார் நடிகை ரோகிணி. இது தொடர்பாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் அவர், "இளையராஜா என்னிடம் கோபப்பட்டதை பற்றி ஆதங்கப்படும் அனைவருக்கும் நன்றி. நான் அதை பெரிதாக கருதவில்லை. விட்டுவிடலாம் என்று நினைக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
ரோகிணியின் இந்தப் பதிவிற்கு ஆதரவாகப் பலர் பதிவிட்டு வருகின்றனர். ரோகிணியின் பக்குவமான இந்த அணுகுமுறையை அவர்கள் பாராட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











