அந்நியன் சதா இப்போ என்ன பண்றாங்க தெரியுமா? புலிகளையும், சிறுத்தைகளையும் சும்மா வளைச்சு வளைச்சு!

சென்னை: ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சதா வைல்டு லைஃப் போட்டோகிராஃபியில் தனது ஆர்வத்தை அதிகமாக செலுத்தி வருகிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வந்த நடிகை சதா, கடந்த 2018ல் கடைசியாக டார்ச்லைட் எனும் படத்தில் நடித்து இருந்தார்.

அதன் பிறகு சினிமாவுக்கு பிரேக் விட்ட அவர், தற்போது வன விலங்குகளை புகைப்படங்கள் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

போயா போ

போயா போ

தெலுங்கில் வெளியான ஜெயம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை சதா, தமிழிலும் அதே டைட்டிலில் வெளியான படத்தின் மூலம் கோலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்தார். அந்த படத்தில் அறிமுகமான ரவி ஜெயம் ரவியாக பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். போயா போயான்னு படம் முழுக்க ஜெயம் ரவியை பார்த்து சொல்லி வந்த நடிகை சதா வைல்டு லைஃப் போட்டோகிராஃபராக மாறி உள்ளார்.

அந்நியன் நந்தினி

அந்நியன் நந்தினி

ஜெயம், எதிரி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை சதாவுக்கு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான பிரம்மாண்ட படமான அந்நியன் படத்தில் நந்தினி எனும் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு நடிகர் அஜித்துடன் திருப்பதி படத்தில் நடித்த சதாவுக்கு தமிழில் கடைசியாக ஹிட் கொடுத்த படமாக உன்னாலே உன்னாலே அமைந்தது.

டார்ச்லைட்

டார்ச்லைட்

வடிவேலுவுடன் எலி படத்தில் நடித்த நடிகை சதா கடைசியாக 2018ம் ஆண்டு இயக்குநர் மஜித் இயக்கத்தில் வெளியான டார்ச்லைட் படத்தில் விலை மாதுவாக ரொம்பவே போல்டான ரோலில் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் சொதப்பிய நிலையில், அதன் பிறகு சினிமாவில் நடிப்பதையே விட்டு விட்டார் நடிகை சதா.

வைல்ட் லைஃப் போட்டோகிராஃபர்

வைல்ட் லைஃப் போட்டோகிராஃபர்

நடிகர் அஜித்தின் திருப்பதி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த சதா அஜித்தை போல தற்போது போட்டோகிராஃபர் ஆகி உள்ளார். 38 வயதான நடிகை சதா தற்போது வைல்டு லைஃப் போட்டோகிராஃபராக மாறி உள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புலிகளையும், சிறுத்தைகளையும், மயில், காட்டெருமை என ஏகப்பட்ட மிருகங்களையும் பறவைகளையும் போட்டோ எடுத்து போஸ்ட் செய்து வருகிறார்.

ஏகப்பட்ட இடங்களுக்கு டிராவல்

ஏகப்பட்ட இடங்களுக்கு டிராவல்

காட்டு விலங்குகளை புகைப்படம் எடுத்து வரும் நடிகை சதா பல இடங்களுக்கு தனது டீமுடன் டிராவல் செய்து வருகிறார். சமீபத்தில் புலி மற்றும் சிறுத்தையை அவர் போட்டோக்கள் எடுத்த வீடியோக்களையும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்டுகளையும் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X