ஆமிர் கானுக்கு டின்னர் கொடுத்த நாக சைதன்யா... ஆப்சென்ட்டான சமந்தா.. என்னதான் நடக்குதுங்க!
ஹைத்ராபாத்: பிரபல பாலிவுட் நடிகரான ஆமீர் கானுக்கு நாகார்ஜூனா குடும்பத்தினர் கொடுத்த இரவு விருந்தில் நடிகை சமந்தா புறக்கணிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
தெலுங்கு சினிமா இண்டஸ்ட்ரியின் சூப்பர் ஸ்டார் ஜோடியாக வலம் வருபவர்கள் நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா.
இவர்கள் இருவரும் குடும்பத்திற்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாகவும் விரைவில் விவாகரத்து பெற போவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

நேரடியாக பதில் அளிக்கவில்லை
இந்த தகவல் குறித்து நாக சைதன்யா மற்றும் சமந்தாவிடம் கேள்வி எழுப்பிய போது இருவருமே அதுகுறித்து நேரடியாக பதில் அளிக்கவில்லை. இந்நிலையில் நடிகர் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள லவ் ஸ்டோரி திரைப்படம் அண்மையில் வெளியானது.

ஆமீர் கான் புரமோஷன்
இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வசூலையும் குவித்து வருகிறது. இந்நிலையில் நடிகர் நாக சைதன்யா பாலிவுட்டில் நடித்து வரும் லால் சிங் சதா படத்தின் கோ ஸ்டாரான பிரபல பாலிவுட் நடிகர் ஆமீர் கான் லவ் ஸ்டோரி படத்திற்கு புரமோட் செய்யும் வகையில் அண்மையில் ஹைத்ராபாத் சென்றார்.

சமந்தா மிஸ்ஸிங்
அப்போது ஆமீர் கானுக்கு நாக சைதன்யாவின் குடும்பத்தினர் தங்களின் வீட்டில் இரவு விருந்து கொடுத்துள்ளனர். நாகார்ஜூனாவின் குடும்பத்தினர் ஆமீர் கானுடன் மாலை நேரத்தை அனுபவிக்கும் பல போட்டோக்கள் ஆன்லைனில் வெளிவந்தன. ஆனால் அந்த போட்டோக்களில் ஒன்றில் கூட நடிகையும் நாக சைதன்யாவின் மனைவியுமான சமந்தா இல்லாதது ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

சமந்தா புறக்கணிப்பு
நடிகை சமந்தா ஆமீர் கானுக்கு வழங்கப்பட்ட இரவு விருந்தில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இது தம்பதியர் தனித்தனியாக வாழ்ந்து வருவதாக பரவி வரும் வதந்திகளை மேலும் தூண்டியுள்ளது. ஆமீர் கானுக்கு அளிக்கப்பட்ட இரவு விருந்து நிகழ்ச்சியில் நாகார்ஜூனா குடும்பத்தினர் நடிகை சமந்தாவுக்கு அழைப்பு விடுக்காமல் புறக்கணித்து விட்டார்களா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

எமோஷனலான நாகார்ஜூனா
இதனிடையே ஆமீர்கானுடனான இரவு விருந்தின் போது நாகார்ஜுனா உணர்ச்சிவசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவர்களின் உரையாடலின் போது படத்தில் சைதன்யாவின் கதாபாத்திரத்திற்கு பால ராஜு என்று பெயர் வைத்தது குறித்து பேசிய நாகார்ஜூனா, தனது தந்தை அக்கினேனி நாகேஸ்வராவும் அதே பெயரில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததாக கூறி உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.

தொழில் வாழ்க்கை வேறு
இதனிடையே சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், சைதன்யாவிடம் சமந்தாவுடனான பிரிவு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த நாக சைதன்யா, சினிமாவில் நடிக்க தொடங்கிய ஆரம்ப காலத்திலிருந்தே, தான் தனது தனிப்பட்ட வாழ்க்கையையும் தொழில் வாழ்கையையும் சம்பந்தப் படுத்திக்கொள்வதில்லை என்றார்.

வேலையால் நீர்த்துப் போகவில்லை
இதனை தனது பெற்றோரிடம் இருந்து தான் கற்றுக்கொண்டதாகவும் இந்த பழக்கம் தனக்கு எப்போதும் உண்டு என்றும் கூறினார். தனது பெற்றோர் வீட்டிற்கு வந்த பிறகு அவர்கள் வேலை பற்றி பேசவே மாட்டார்கள் என்றும் அவர்கள் வேலைக்குச் சென்றபோது, அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை ஒருபோதும் வேலையால் நீர்த்துப்போகவில்லை. அவர்கள் பராமரித்த ஒரு மிகச்சிறந்த சமநிலை இது, நான் எப்போதும் கவனித்தேன்.. என்று கூறியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











