மும்பையில் வீடு வாங்கிய சமந்தா.. இனி அங்கேயேதான் செட்டிலா?.. அந்த விஷயமும் கன்ஃபார்ம்தானோ?

சென்னை: நடிகை சமந்தா நடிகர் நாக சைதன்யாவுடனான விவாகரத்துக்கு பிறகு சிங்கிளாக வாழ்ந்துவருகிறார். இடையில் மையோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பிய அவர் சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸில் நடித்திருந்தார். இது ஒருபக்கம் இருக்க அந்த வெப் சீரிஸின் இயக்குநர்களில் ஒருவரான ராஜ் நிடிமோருவை காதலித்துவருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மும்பையிலேயே செட்டில் ஆகும் முடிவை அவர் எடுத்திருப்பதாக தெரிகிறது.

தமிழ் திரைத்துறையில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய சமந்தா தெலுங்கில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமேக்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்தார். அப்போது அவர்கள் இரண்டு பேருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.அந்தக் காதலுக்கு இரண்டு வீட்டு சம்மதம் கிடைத்ததை அடுத்து திருமணமு செய்துகொண்டார்கள். ஆனால் சில வருடங்களிலேயே அவர்கள் பிரிந்துவிட்டார்கள்.

சிங்கிள்தான்: சைதன்யாவை சமந்தா பிரிந்த பிறகு இன்றுவரை சிங்கிளாகவே இருப்பதாக தெரிகிறது. இதற்கிடையே மையோசிடிஸ் நோயாலும் பாதிக்கப்பட்டிருந்த அவர்; தீவிரமான சிகிச்சை எடுத்த பிறகு அதிலிருந்து நல்லபடியாக மீண்டு வந்தார். அதனையடுத்து குஷி, சாகுந்தலம் ஆகிய படங்களிலும், சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸிலும் நடித்தார். இவற்றில் வெப் சீரிஸ் மட்டும் அவருக்கு ஓரளவுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

Actress Samantha has bought a new house in Mumbai
Photo Credit:

ராஜுடன் காதல்?: இதெல்லாம் ஒருபக்கம் இருக்க அவரும் நடிகர் நாக சைதன்யாவை போல் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. மேலும், சிட்டாடல், தி ஃபேமிலி மேன் ஆகிய வெப் சீரிஸ்களின் இயக்குநர் ராஜ் நிடிமோருவை காதலித்துவருவதாக கூறப்படுகிறது. அவர்கள் இரண்டு பேரும் ஜோடியாக வெளிநாடுகளுக்கு எல்லாம் சென்றுவருகிறார்கள். ஆனால் இந்த ரிலேஷன்ஷிப் வதந்தி குறித்து மௌனமே காத்துவருகிறார்கள்.

கரியரில் கவனம்: அவரது பெர்சனல் வாழ்க்கை இப்படி சென்றுகொண்டிருக்க ப்ரொபஷ்னல் வாழ்க்கையையும் கவனிக்க ஆரம்பித்திருக்கிறார் சாம். அவர் இப்போது Rakt Brahmand: The Bloody Kingdom என்ற வெப் சீரிஸில் நடித்துவருகிறார். இதுதவிர்த்து மேலும் சில தமிழ், தெலுங்கு படங்களில் அவர் கமிட்டாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தனது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கியிருக்கிறார்.

என்ன தொடக்கம்?: அதாவது அவர் மும்பையில் புதிய வீடு ஒன்றை வாங்கியிருக்கிறார். அந்தப் புகைப்படத்தை பகிர்ந்து புதிய தொடக்கம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் இனி மும்பையிலேயே செட்டிலாக அவர் முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ராஜ் நிடிமோருவை அவர் காதலித்துவருவதாலும், அதிக வெப் சீரிஸ்களில் நடிக்க ஆரம்பித்திருப்பதாகவும்; மும்பையில் இருந்தால்தான் சரியாக வரும் என்று எண்ணி இந்த முடிவை அவர் எடுத்திருப்பதாகவும் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X