"நீங்கள் இல்லாமல் நான் என்ன செய்வேன்’’.. சமந்தாவின் இன்ஸ்டா பதிவு.. காரணம் என்ன ?

சென்னை : தென்னிந்திய முன்னணி நடிகையான சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி பிறகு பலமொழி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் அழியா இடம் பிடித்தவர் நடிகை சமந்தா.

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து தனக்கென தனியிடத்தை தமிழ் சினிமாவில் தக்கவைத்துக்கொண்டார்.

பிரிந்தனர்

பிரிந்தனர்

நடிகை சமந்தா கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைதன்யா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கோவாவில் கோலாகலமாக நடைபெற்றது. பார்ப்பவர்களின் கண்படும் வகையில் அம்சமான ஜோடியாக இருந்த, இவர்களின் திருமண உறவு 4 ஆண்டுகள் நீடித்த நிலையில் திடீரென இருவரும் பிரிவதாக கூட்டாக அறிவித்தனர்.

மன அழுத்தத்தில்

மன அழுத்தத்தில்

விவாகரத்து ஒரு பக்கம்... தவறான வதந்தி ஒரு பக்கம் என மன அழுத்தத்தில் இருந்த சமந்தா தனது தோழி ஷில்பா ரெட்டியுடன் ஆன்மீக சுற்றுலா சென்றிருந்தார். திரைப்படங்களில் தனது முழு கவனத்தையும் செலுத்தி கொஞ்சம் கொஞ்சமாக மனஅழுத்தத்தில் இருந்து மீண்டு வருகிறார்.

நான் என்ன செய்வேன்

நான் என்ன செய்வேன்

இவர் சமீபத்தில் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா படத்தில், சமந்தா ஆடிய ஊ சொல்றியா மாமா பாடல் சில எதிர்ப்புகளுக்கு மத்தியில் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா. இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், வெண்ணிலா கிஷோர் மற்றும் ராகுல் ரவீந்திரா உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, "நீங்கள் இல்லாமல் நான் என்ன செய்வேன்" என பதிவிட்டுள்ளார்.

Recommended Video

Samantha & Nagachaitanya பிரிவிற்கு பின் நடந்த முதல் சந்திப்பு | Yasoda, Ramanaidu Studio
காத்துவாக்குல இரண்டு

காத்துவாக்குல இரண்டு

சமந்தா, தற்போது பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X