சமந்தா வாங்கிய புது வீடு.. வாழ்க்கை இனிமையாக மாறும் என நம்புகிறேன்.. இன்ஸ்டாவில் உருக்கமான பகிர்வு!
மும்பை: முன்னணி நடிகையாக இந்திய சினிமாவில் வலம் வரும் சமந்தா, தற்போது மும்பையில் வீடு வாங்கி அதில் குடி புகுந்துள்ளார். தற்போது தனது புதிய ஆடம்பர வீட்டின் கிரகப்பிரவேச படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். வாழ்க்கை இனிமையாக அமையும் என்று நம்புகிறேன். எப்போதும் புன்னகையுடன் இருப்பேன்," என்று சமந்தா குறிப்பிட்டிருந்தார்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா, கடைசியாக விஜய்தேவரகொண்டாவும் இணைந்து குஷி படத்தில் நடித்திருந்தார். அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிப்பெறவில்லை. இதையடுத்து, சிட்டாடல் வெப் தொடர் நடித்திருந்தார். அது ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து Rakt Brahmand: The Bloody Kingdom எனும் வெப் தொடரில் நடிக்கவுள்ளார். இந்த வெப் தொடரை இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கவுள்ளனர். நடிகை சமந்தா இயக்குநர் ராஜ் நிடிமோருவை காதலித்து வருவதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அது உண்மை என்பது போல இருவரும் ஜோடியாக பல இடங்களில் சுற்றி வருவதால், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

நடிகை சமந்தா ரூத் பிரபு: மும்பையில் குடியேறி இருக்கும் நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது இன்ஸ்டாகிராமில், மௌனமான தருணங்களில் தனக்கு ஏற்பட்ட தெளிவு குறித்து பகிர்ந்துள்ளார். அதில், எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை வெறும் வாய் வார்த்தையாக இல்லாமல், நிஜமாகவே வாழ விரும்புகிறேன். நான் நினைப்பது, சொல்வது, செய்வது, மற்றும் விரும்புவது அனைத்தும் என்னுடைய உயர்ந்த சுயத்தை மதிக்க வேண்டும். இந்த எண்ணம் எனக்கு மௌனமாக இருந்தபோது தோன்றியது. இப்போது அதை வெறும் சொல்லாக இல்லாமல், வாழ்க்கையாக வாழ விரும்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார். அத்துடன், சமந்தா பூஜை செய்வது, உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி செய்வது, தனது செல்ல நாய்களுடன் விளையாடுவது போன்ற வீடியோ மற்றும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
சமந்தா பதில்: கடந்த வாரம் அக்டோபர் 5 ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் சமந்தா ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வந்தார். அப்போது, ஒரு ரசிகர், உங்கள் பார்வையை மாற்றியது என்ன என்று கேட்டார்? அதற்கு பதிலளித்த சமந்தா, உங்களுக்கு எது தொந்தரவாக இருக்கிறதோ, அதில் தான் உங்கள் நோக்கம் இருக்கும். எனவே, நான் ஒரு பகுதியாக இருக்கும் எல்லாமே, அனைத்து தொந்தரவுகளையும் வரைபடமாக சேர்ந்து பார்த்தால், தொந்தரவான விஷயங்களுடன் இணைந்திருக்கும். இது என் வாழ்க்கையை பல வழிகளில் எளிதாக்கியுள்ளது. உங்களுக்கும் இது உதவும், முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கு எது தொந்தரவாக இருக்கிறதோ, அதில் தான் உங்கள் நோக்கம் இருக்கும் என்று கூறியிருந்தார்.
பள்ளியில் கற்ற பாடங்கள் பற்றிப் பேசிய நடிகை சமந்தா, நான் கருணை, அன்பு, சிறந்த மனிதனாக எப்படி இருக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டேன். இவையே எனக்கு உண்மையாகவே கை கொடுத்த குணங்கள் என்று நினைக்கிறேன். பள்ளியில் படித்தது எதுவும் எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால், இந்த குணங்கள் என்னுடன் நிலைத்து நிற்கின்றன. அவை வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவை என பதில் அளித்து இருந்தார்.


Click it and Unblock the Notifications











